2 ஆறுகளை கடந்து சென்று கல்வி கற்பிக்கும் ஆசிரியைக்கு குவியும் பாராட்டு
சத்தீஸ்கரை சேர்ந்த ஆரம்ப பள்ளி ஆசிரியை கர்மிலா டோப்போ தினமும் இரண்டு ஆற்றைக் கடந்து பாடம் கற்பிக்க பள்ளிக்கு செல்கிறார். தூர்பூர் கிராமம் என்ற பகுதியில் இவர் வேலை செய்யும் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளிக்கு செல்வதற்கு இதை தவிர வேறு வழி கிடையாது. இவர் ANI செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், குழந்தைகளின் எதிர்காலத்தை கட்டியெழுப்புதற்காக தான் பள்ளிக்கு செல்வதாகவும், அந்த பாதையை தவிர பள்ளியை அடைய வேறு வழி இல்லை என்றும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இவரது இந்த முயற்சிகளை பல்ராம்பூர் கலெக்டர் ரிமிஜியஸ்-எக்கா பாராட்டியுள்ளார். "நிச்சயமாக இந்த ஆசிரியை தன் பணியை மிகவும் நேர்மையாக செய்கிறார். இதே போன்ற பணியை மற்ற ஆசிரியர்களிடமிருந்தும் எதிர்பார்க்கிறேன்.'' என்று கலெக்டர் எக்கா கூறியுள்ளார்.