Loading...
"எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?" - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

"எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?" - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

எழுதியவர் Vasuki
Aug 09, 2026
09:55 am

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வட கடலோரத் தமிழகப் பகுதிகளில் சுமார் 5.8 கி.மீ முதல் 7.6 கி.மீ உயரம் வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக இந்த மழைப்பொழிவு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை வாய்ப்புள்ள பகுதிகள்:

பலத்த தரைக்காற்று எச்சரிக்கை:

இன்று மேற்கு தொடர்ச்சி மலை சார்ந்த மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஏனைய தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஆகஸ்ட் 11 முதல் 14 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை தொடரும்.

இன்றும் நாளையும் தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும்.

வெப்பநிலை நிலவரம்

சென்னை வானிலை நிலவரம்

இன்று அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டியே இருக்கும். நாளை முதல் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலையில் பெரிய மாற்றங்கள் இருக்காது என்றாலும், வட உள் தமிழகத்தில் வெப்பநிலை சற்று உயர வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மாலை நேரங்களில் வெளியே செல்லும் சென்னை வாசிகள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் செல்லுமாறு வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT