ஓஎம்ஆர் சாலையில் போக்குவரத்து மாற்றங்கள் - சென்னை போக்குவரத்து காவல்துறை
சென்னை ஓஎம்ஆர் சாலையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில் இது குறித்த தகவலை சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. இம்மாற்றங்கள் சோதனைமுறையில் நாளை(டிச.,16)முதல் அமலுக்கு வருகிறது. இதற்கான அறிக்கையில், சென்னை காமாட்சியம்மன் ஜங்க்ஷனில் இருந்து சோழிங்கநல்லூர் செல்லும் வாகனங்கள் அனைத்தும் பி.எஸ்.ஆர்.மால் அருகே இடதுபுறம் அதாவது, ராஜீவ்காந்தி சாலையில் திருப்பிவிடப்பட்டு பெருங்குடி சுங்கச்சாவடியிலுள்ள புதிய யூ-டர்ன் மூலம் சோழிங்கநல்லூர் மற்றும் மற்ற இடங்களுக்கு செல்லும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல், சோழிங்கநல்லூரில் டைடல் பார்க் வழியே வரும் வாகனங்கள் துரைப்பாக்கம் ஜங்க்ஷனில் திருப்பிவிடப்படும் என்றும், தொடர்ந்து, கார்ப்பரேஷன் சாலையிலிருந்து துரைப்பாக்கம் நோக்கி வரும் வாகனங்கள் ராஜீவ்காந்தி சாலை இடதுபுறம் திருப்பிவிடப்பட்டு, யூ-டர்ன் எடுத்து துரைப்பாக்கம் ஜங்க்ஷன் மற்றும் இதர இடங்களுக்கு செல்லவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.