சென்னை ஸ்டான்லி மற்றும் தருமபுரி மருத்துவ கல்லூரிகள் இயங்க அனுமதி
தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை ஸ்டான்லி, திருச்சி மற்றும் தருமபுரி தருமபுரி உள்ளிட்ட 3 அரசு மருத்துவமனைகளின் அங்கீகாரம் அண்மையில் ரத்து செய்யப்பட்டது என்று அறிவிப்பு வெளியானது. இது பெரும் அதிர்ச்சியினை மாநிலம் முழுவதும் ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து அமைச்சர் மா.சுப்ரமணியம் தற்போது பேட்டியளித்துள்ளார். அதில் அவர், "சென்னை ஸ்டான்லி மற்றும் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட ரத்து செய்வதற்கான நோட்டீஸ் திரும்பப்பெற்று மீண்டும் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தடையில்லா சான்றிதழும் இம்மருத்துவமனைகளுக்கு தரப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.
பொது கலந்தாய்வு வரைவு அனுப்பப்பட்டதாக தகவல்
மேலும் பேசிய அவர், "அரசு மருத்துவமனை கல்லூரிகளில் உள்ள ஓரிரு சிறிய குறைகளும் சரி செய்யப்பட்டதோடு, சிசிடிவி மற்றும் பயோமெட்ரிக் முறைகளின் குறைபாடுகளும் சரிசெய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிக்கை வழங்கப்பட்டதையடுத்து தேசிய மருத்துவ ஆணையம் நேற்று(ஜூன்.,7) குறிப்பிட்ட கல்லூரிகளுக்கு நேரடியாக ஆய்வினை மேற்கொண்டனர்" என்று அவர் தெரிவித்தார். முன்னதாக, பொது கலந்தாய்வு வரைவினை மருத்துவ இடங்களுக்கு மத்திய அரசு அனுப்பியதாக தெரிகிறது. அதற்கு கலந்தாய்வு என்பது மாநில உரிமை என்று குறிப்பிட்ட மத்திய அரசு ஆட்சபனை கடிதத்தினையும் அனுப்பியது. அதே போல் பொது கலந்தாய்வு இல்லை என்று கூறிய மத்திய அரசு, மாநில அரசுகளின் பொறுப்பில் காலந்தாய்வினை நடத்தி கொள்ளலாம் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.