Loading...
பரந்தூர் விமான நிலைய திட்டம் மாற்றம்: விவசாய நிலங்களைப் பாதுகாக்க முதலமைச்சர் விஜய் எடுத்த முடிவு
விவசாய நிலங்களைப் பாதுகாக்க முதலமைச்சர் விஜய் எடுத்த முடிவு

பரந்தூர் விமான நிலைய திட்டம் மாற்றம்: விவசாய நிலங்களைப் பாதுகாக்க முதலமைச்சர் விஜய் எடுத்த முடிவு

எழுதியவர் Venkatalakshmi V
Aug 24, 2026
10:16 am

செய்தி முன்னோட்டம்

சென்னையின் இரண்டாவது விமான நிலைய திட்டத்தில் விவசாய நிலங்கள் மற்றும் பொதுமக்களின் குடியிருப்புகளுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாத வகையில் பரந்தூருக்குப் பதிலாக மாற்று இடத்தை தேர்வு செய்ய தமிழக அரசு முடிவை எடுத்துள்ளது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் 5,320 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய விமான நிலையம் அமைக்க முந்தைய திட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. ஆனால், இதில் சுமார் 3,750 ஏக்கர் தனியார் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட இருந்ததால் அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். மக்களின் வாழ்வாதாரத்தையும் விவசாயத்தையும் பாதுகாக்கும் நோக்கில் இத்திட்டத்தை மாற்று இடத்திற்கு மாற்ற முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

சாத்தியக்கூறுகள்

புதிய இடத்தேர்வு மற்றும் சாத்தியக்கூறுகள்

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விமான நிலையம் அமைப்பதற்கான மாற்று இடங்கள் குறித்துத் தலைமைச் செயலகத்தில் தீவிர ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தொழில் நுட்ப சாத்தியக்கூறுகள், விமானப் பாதுகாப்பு மற்றும் ஓடு பாதை அமைப்பதற்கான வசதிகள் ஆகியவை குறித்துச் சம்பந்தப்பட்ட துறைகளுடன் ஆய்வு செய்த பிறகே இறுதி இடம் முறைப்படி அறிவிக்கப்பட உள்ளது.

இரண்டாவது விமான நிலையத்திற்கான மாற்று இடத்தேர்வு ஒருபுறம் நடைபெற்று வரும் நிலையில், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தின் திறனை விரிவுபடுத்தவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்காக விமான நிலையத்தின் வடமேற்கு பகுதியில் ஆண்டுக்குக் கூடுதலாக 2 கோடி பயணிகளைக் கையாளக்கூடிய வகையில் புதிய டெர்மினல் 5 அமைப்பதற்கு இந்திய விமான நிலையங்கள் ஆணையத்துடன் இணைந்து செயல்படத் திட்டமிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT