சென்னை வடபழனி முருகன் கோயிலுக்கு நள்ளிரவில் வந்த வெடிகுண்டு மிரட்டல்
செய்தி முன்னோட்டம்
சென்னையின் பிரபலமான வடபழனி முருகன் கோயிலுக்கு நேற்று நள்ளிரவு சுமார் 12.15 மணிக்கு வெடிகுண்டு மிரட்டல் அழைப்பு வந்தது.
நள்ளிரவே மிரட்டல் தகவலின் எதிரொலியாக, காவல் துறையினர், மோப்ப நாய் பிரிவு மற்றும் வெடிகுண்டு தடுப்பு போலீசார் உடனடியாக கோயிலுக்கு வந்தனர்.
கோயில் திறக்கப்படாத நிலையில், வெளியே சோதனை மேற்கொண்டனர்.
அதன் பிறகு, அதிகாலை 4 மணிக்கு கோயிலின் வாயில் திறக்கப்பட்டதும், சோதனையில் எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லை என்பதும், அது வெறும் புரளி எனவும் கண்டறியப்பட்டது.
பிறகு, வழக்கம் போல காலை 6 மணிக்கு கோயில் நடை பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து, மிரட்டல் செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவத்தையடுத்து கோயிலின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
Embed
Twitter Post
வடபழநி முருகன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்#vadapalani | #murugantemple | #bombthreat | #police #investigation | #KumudamNews24x7 pic.twitter.com/Vg9ADs8i7p— KumudamNews (@kumudamNews24x7) December 30, 2024