Page Loader
சென்னை மெட்ரோ 2ம் கட்ட வழித்தடம் - டாடா நிறுவனத்துடன் ஒப்பந்தம்
சென்னை மெட்ரோ 2ம் கட்ட வழித்தடம் - டாடா நிறுவனத்துடன் ஒப்பந்தம்

சென்னை மெட்ரோ 2ம் கட்ட வழித்தடம் - டாடா நிறுவனத்துடன் ஒப்பந்தம்

எழுதியவர் Nivetha P
Oct 13, 2023
06:54 pm

செய்தி முன்னோட்டம்

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை துவங்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றநிலையில், தற்போது இதன் 2ம் கட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட வழித்தடம் 5ல்-ரயில் நிலையங்களை அமைக்க டாடா நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. ரூ.1,817.54 கோடி மதிப்பீட்டில் போடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன இயக்குனரான அர்ஜுனன் மற்றும் டாடா நிறுவனத்தின் துணைத்தலைவரான ராமன் கபில் உள்ளிட்டோர் கையெழுத்திட்டுள்ளனர். இந்த ஒப்பந்தத்தின் படி, 2ம் கட்ட வழித்தடம் 5ல், சீனிவாச நகர், கொளத்தூர் சந்திப்பு, வில்லிவாக்கம், வில்லிவாக்கம் பேருந்து நிலைய முனையம், வில்லிவாக்கம் எம்.டி.எச். சாலை உள்ளிட்ட 5 சுரங்கப்பாதை ரயில் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

ஒப்பந்தம்