Page Loader
வங்கி கணக்கில் திடீரென ரூ.753 கோடி டெபாசிட்: சென்னை மருந்து கடை ஊழியருக்கு அடித்த யோகம் 
தமிழகத்தில் மூன்றாவது முறையாக இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது.

வங்கி கணக்கில் திடீரென ரூ.753 கோடி டெபாசிட்: சென்னை மருந்து கடை ஊழியருக்கு அடித்த யோகம் 

எழுதியவர் Sindhuja SM
Oct 08, 2023
04:37 pm

செய்தி முன்னோட்டம்

சென்னையில் மருந்தக ஊழியராக பணிபுரிந்து வரும் ஒருவர் தனது வங்கிக் கணக்கில் ரூ.753 கோடி வரவு வைக்கப்பட்டுள்ளதை நேற்று(அக் 7) கண்டுபிடித்தார். முஹம்மது இத்ரிஸ் என்ற அந்த நபர் தனது கோடக் மஹிந்திரா வங்கிக் கணக்கில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை(அக்டோபர் 6) தனது நண்பருக்கு ரூ.2,000 அனுப்பினார். இந்த பரிவர்த்தனைக்குப் பிறகு, அவர் தனது வங்கி கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை சரிபார்க்க முடிவு செய்தார். அப்போது, அவரது வங்கி கணக்கில் ரூ.753 கோடி இருப்பது அவருக்கு தெரியவந்தது. இந்த அசாதாரண நிகழ்வு குறித்து கவலையடைந்த இத்ரிஸ், உடனடியாக இந்த விஷயத்தை வங்கி ஊழியர்களிடம் தெரிவித்தார்.

சஜிவ்க்ஸ்ட்

இதற்கு முன் நடந்த இதே போன்ற சம்பவங்கள் 

தமிழகத்தில் மூன்றாவது முறையாக இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்துள்ளது. இதற்கு முன்னதாக சென்னையை சேர்ந்த கால்டாக்சி ஓட்டுநர் ஒருவருக்கு இதே போல ஒரு சம்பவம் நடந்தது. சென்னையைச் சேர்ந்த ராஜ்குமார் என்ற கால்டாக்சி ஓட்டுநர் தனது தமிழ்நாடு மெர்க்கன்டைல் ​​வங்கிக் கணக்கில் ரூ.9,000 கோடி இருப்பதை கண்டுபிடித்து புகாரளித்தார். இதனையடுத்து, தமிழ்நாடு மெர்க்கண்டைல் ​​வங்கி நிலைமையை சரிசெய்து, அதிகப்படியான பணத்தை ராஜ்குமாரிடம் இருந்து திரும்பப் பெற்றது. அதற்கு முன்னதாக, தஞ்சாவூரைச் சேர்ந்த கணேசன் என்பவர் தனது வங்கிக் கணக்கில் ரூ.756 கோடி இருப்பதைக் கண்டு தகவல் தெரிவித்தார்.