LOADING...
இனி சென்னை-கோவை விரைவாக செல்லலாம்; மணிக்கு 145 கிமீ வேகத்தில் ரயில்களை இயக்கி சோதனை
ஜோலார்பேட்டை-கோவை மார்க்கத்தில் மணிக்கு 145 கிமீ வேகத்தில் ரயில்களை இயக்கி சோதனை

இனி சென்னை-கோவை விரைவாக செல்லலாம்; மணிக்கு 145 கிமீ வேகத்தில் ரயில்களை இயக்கி சோதனை

எழுதியவர் Sekar Chinnappan
Nov 28, 2025
01:19 pm

செய்தி முன்னோட்டம்

சென்னை-கோவை மார்க்கத்தில் மணிக்கு 130 கிமீ வேகத்தில் ரயில்களை இயக்குவதற்கான தண்டவாள மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, ஜோலார்பேட்டைக்கும் கோவைக்கும் இடையே வியாழக்கிழமை (நவம்பர் 27) அதிவேக ரயில் சோதனை ஓட்டத்தை தெற்கு ரயில்வே அதிகாரிகள் வெற்றிகரமாக நடத்தினர். இதில் ரயில் அதிகபட்சமாக 145 கிமீ வேகத்தில் இயக்கப்பட்டுத் தண்டவாளத்தின் ஸ்திரத்தன்மை சோதிக்கப்பட்டது. சென்னை-கோவை மார்க்கத்தில் ரயில்களின் வேகத்தை அதிகரிப்பதற்காக, தண்டவாள கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணி இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. முதல்கட்டமாக, சென்னை-ஜோலார்பேட்டை இடையேயான பணிகள் ஏற்கனவே முடிந்து 130 கிமீ வேகத்தில் ரயில் இயக்கப்படுகிறது. இரண்டாம் கட்டமாக, ஜோலார்பேட்டை-கோவை இடையே 286 கிமீ தூரத்திற்கான மேம்பாட்டுப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில், இந்தச் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

சோதனை

சோதனையின் விவரங்கள்

சென்னை சென்ட்ரலில் இருந்து சிறப்பு ரயிலில் (இன்ஜினுடன் 2 பெட்டிகள்) வந்த அதிகாரிகள், ஜோலார்பேட்டையில் இருந்து திருப்பத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாகக் கோவைக்கு ரயிலை அதிவேகத்தில் இயக்கிப் பார்த்தனர். இந்தச் சோதனையின் போது, ரயில் வளைவுகளில் திரும்பும் வேகம், யார்டு பகுதியில் செல்லும் திறன், மற்றும் தண்டவாளத்தின் ஒட்டுமொத்தத் தாங்கு திறன் ஆகியவை நுணுக்கமாகப் பதிவு செய்யப்பட்டன. 145 கிமீ வேகத்திலும் தண்டவாளத் திறன் வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டதாகத் தெற்கு ரயில்வே அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்தச் சோதனை ஓட்டத்தின் மூலம், ரயில்வே பாதுகாப்பு ஆணையரின் அனுமதி பெற்ற பிறகு, சென்னை-கோவை மார்க்கத்தில் இனிமேல் ரயில்கள் மணிக்கு 130 கிமீ வேகத்தில் இயக்கப்படும். இது பயணிகளுக்கு விரைவான பயண அனுபவத்தை வழங்கும்.

Advertisement