
மிக்ஜாம் புயல் எதிரொலி; சென்னை விமான நிலையம் மூடல்
செய்தி முன்னோட்டம்
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்து வரும் நிலையில், சென்னை விமான நிலையம் இரவு 11 மணி வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், திங்களன்று சென்னையில் தரையிறங்க வேண்டியிருந்த கிட்டத்தட்ட 11 விமானங்கள் பெங்களூரில் உள்ள கெம்பேகவுடா விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளன.
பெங்களூர் விமான நிலைய அதிகாரிகள், சென்னையில் தரையிறங்க வேண்டிய உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்கள் தங்கள் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டதை உறுதிப்படுத்தினர்.
இதற்கிடையே, மிக்ஜாம் புயல் சென்னைக்கு வடகிழக்கே 90 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது.
மேலும், மணிக்கு 8 கிமீ வேகத்தில் நகர்ந்து வரும் இது கரையை கடக்கும்போது காற்றும் 90 முதல் 100கிமீ வேகத்தில் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
சென்னையில் இருந்து 90கிமீ தொலைவில் மிக்ஜாம் புயல்
#JUSTIN சென்னைக்கு 90 கி.மீ. தொலைவில் புயல் #CycloneMichuang #TNrain #WeatherUpdate #news18tamilnadu | https://t.co/uk2cvptM3n pic.twitter.com/vZZsQW98CT
— News18 Tamil Nadu (@News18TamilNadu) December 4, 2023