சென்னை ஆருத்ரா விவகாரம் - 30 பேர் கொண்ட தனிப்படை அமைப்பு
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் சென்னை அமைந்தகரையை தலைமையிடமாக கொண்டு திருவள்ளூர்,திருவண்ணாமலை, போன்ற பல இடங்களில் ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனம் செயல்பட்டு வந்தது.
இந்நிறுவனத்தில் 1லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.36ஆயிரம் வட்டி வழங்கப்படும் என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 9,255பேரிடம் ரூ.2,438கோடி பெற்று மோசடி செய்துள்ளார்கள் என்று செய்திகள் வெளியானது.
இதனைதொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தியதில் பாஜக விளையாட்டுபிரிவு மாநில செயலாளர் ஹரீஸை கைது செய்துள்ளார்கள்.
இதில் தொடர்புடைய 21 பேர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே இதில் சம்பந்தப்பட்ட 10பேரை போலீசார் கைதுசெய்துள்ளார்கள்.
இந்நிலையில் வழக்கில் தொடர்புடைய மற்றவர்களைப்பிடிக்க பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி ஆசியம்மாள் தலைமையில் மாவட்டஅளவில் 30பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
சென்னை ஆருத்ரா விவகாரம் - 30 பேர் கொண்ட தனிப்படை அமைப்பு
#JUSTIN | ஆருத்ரா விவகாரம்; 30 பேர் கொண்ட தனிப்படை அமைப்பு#AarudhraGold | #AarudhraGoldCompany pic.twitter.com/OBnNNiEdQA
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) April 5, 2023