சென்னை ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கு - ஆர்.கே.சுரேஷுக்கு தொடர்பு என தகவல்
தமிழகத்தில் சென்னை அமைந்தகரையை தலைமையிடமாக கொண்டு திருவள்ளூர்,திருவண்ணாமலை, போன்ற பல இடங்களில் ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் 1லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.36ஆயிரம் வட்டி வழங்கப்படும் என்ற மோசடி விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 9,255பேரிடம் ரூ.2,438கோடி பெற்று மோசடி செய்துள்ளார்கள். இந்நிலையில் இதுகுறித்து எழுந்த புகாரின்பேரில், 10பேர் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள். தொடர்ந்து குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில் இந்த நிதிநிறுவன மோசடி வழக்கில் நடிகர் ஆர்.கே.சுரேஷுக்கு தொடர்புள்ளது என்பது தெரியவந்துள்ளது. முன்னதாக இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட நடிகர் ரூசோவிடன் நடத்திய விசாரணையில் இது தெரியவந்துள்ளது. மேலும் அவர் விசாரணையிலிருந்து தப்பிக்க கடந்த 2மாதங்களாக வெளிநாட்டில் உள்ளார் என்றும் கூறப்படுகிறது.