
சென்னை ஆருத்ரா விவகாரம் - மேலும் 2 பேர் கைது
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு மாநிலம், சென்னை அமைந்தகரையை தலைமையிடமாக கொண்டு திருவள்ளூர், திருவண்ணாமலை, போன்ற பல இடங்களில் ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனம் செயல்பட்டு வந்தது.
இந்நிறுவனத்தில் 1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.36 ஆயிரம் வட்டி வழங்கப்படும் என்ற மோசடி விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
அதனை நம்பி கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 9,255 பேரிடம் ரூ.2,438 கோடி பெற்று மோசடி செய்துள்ளார்கள்.
இந்த நிறுவனத்தின் இயக்குனராக செயல்பட்டு வந்த ஹரிஸ் மற்றும் மாலதி ஆகியோரிடம் விசாரணை நடத்தியதில் பல முக்கிய தகவல்கள் வெளியானது.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட 11 பேரினை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்திருந்தனர்.
ஆருத்ரா
கைது செய்யப்பட்ட 2 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது
இந்நிலையில் தற்போது இதில் சம்பந்தப்பட்ட ராஜா செந்தாமரை மற்றும் சந்திரக்கண்ணன் என்னும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள ராஜா செந்தாமரை என்பவர் ஆருத்ரா நிறுவனத்தில் கூடுதல் இயக்குனராக செயல்பட்டு வந்துள்ளார்.
மற்றொரு நபர் சந்திரக்கண்ணன் ஆருத்ரா நிறுவனத்தின் விளம்பர பிரிவில் பணியாற்றி வந்துள்ளார்.
இப்போதைய நிலவரப்படி மொத்தமாக இந்த வழக்கில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் கைதாகியுள்ள சந்திரக்கண்ணன் என்பவரது அண்ணா நகர் வீட்டில் 90 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த முதலீட்டாளர்கள் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து இந்த 2 பேர் வங்கி கணக்கில் இருந்து சுமார் ரூ.5 கோடி பணம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.