Page Loader
பொறியியல் மாணவர் சேர்க்கை விதிகளில் மாற்றம்
பொறியியல் மாணவர் சேர்க்கையின் போது 10ஆம் வகுப்பு மதிப்பெண்கள் கணக்கிடப்படாது.

பொறியியல் மாணவர் சேர்க்கை விதிகளில் மாற்றம்

எழுதியவர் Sindhuja SM
Jun 22, 2023
10:02 am

செய்தி முன்னோட்டம்

2023-2024வது கல்வியாண்டிற்கான பொறியியல் மாணவர் சேர்க்கை விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பின் படி, இந்த கல்வியாண்டிற்கான பொறியியல் மாணவர் சேர்க்கையின் போது 10ஆம் வகுப்பு மதிப்பெண்கள் கணக்கிடப்படாது. பொதுவாக, பொறியியல் மாணவர் சேர்க்கை நடைபெறும் போது, பலர் ஒரே கட்-ஆஃப் மதிப்பெண்கள் எடுத்திருந்தால், அவர்களுக்கு ரேண்டம் எண்கள் அறிவிக்கப்பட்டு, அதன் அடிப்படையிலேயே கலந்தாய்வு நடத்தப்படும். இந்த ரேண்டம் எண்கள் ஒதுக்கப்படும் போது, 10ஆம் வகுப்பு மதிப்பெண்களும் பிறந்த தேதியும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அதன் அடிப்படையில் யார் முன்னிலையில் இருக்கிறார்களோ அவர்களுக்கே பொறியியல் கல்லூரிகளில் முன்னுரிமை வழங்கப்படும்.

சஞ்ச்க

கொரோனா தோற்று காரணமாக தடைபட்ட 10ஆம் வகுப்பு தேர்வு 

ஆனால், கொரோனா தோற்று காரணமாக, இந்த வருடம் கல்லூரியில் சேர இருக்கும் மாணவர்கள் 10ஆம் வகுப்பு பொது தேர்வுகளை எழுதவில்லை. அதாவது, கடந்த 2021-2022வது கல்வியாண்டின் போது கொரோனா பரவல் அதிகமாக இருந்ததால் மாணவர்களால் தேர்வு எழுத முடியவில்லை. எனினும், அவர்களுக்கு தேர்ச்சி அளிக்கப்பட்டது. எனவே, இந்த ஆண்டு பொறியியல் சேர்க்கையின் போது 10ஆம் வகுப்பு மதிப்பெண்களை கணக்கிட முடியாது என்பதால், மாணவர் சேர்க்கை விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வரும் ஜூலை 7ஆம் பொறியியல் மாணவர் சேர்க்கை தொடங்க உள்ள நிலையில், தற்போது வெளியாகி இந்த அறிவிப்பு பொறியியலில் சேர விரும்பும் மாணவர்கள் மத்தியில் நிம்மதியை ஏற்படுத்தி இருக்கிறது.