Page Loader
தெலுங்கு தேசம் கட்சியை வழிநடத்த இருக்கிறாரா சந்திரபாபு நாயுடுவின் மருமகள்?
புவனேஸ்வரியும், பிராமணியும் தெலுங்கு தேசம் கட்சி சார்பாக போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.

தெலுங்கு தேசம் கட்சியை வழிநடத்த இருக்கிறாரா சந்திரபாபு நாயுடுவின் மருமகள்?

எழுதியவர் Sindhuja SM
Oct 02, 2023
05:53 pm

செய்தி முன்னோட்டம்

திறன் மேம்பாட்டுக் கழகத்தில் நடந்த ரூ.371 கோடி ஊழல் தொடர்பான வழக்கில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் முன்னாள் ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி காலை கைது செய்யப்பட்டார். தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், சாலை பணிகளில் ஊழல் செய்ததாக கூறி அவரது மகன் லோகேஷ் மீது சிஐடி வழக்கு பதிவு செய்துள்ளது. சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ் எந்த நேரத்திலும் கைது செய்ப்படலாம் என்று கூறப்படுகிறது. இதற்கிடையில், இன்னும் சில மாதங்களில் ஆந்திராவில் சட்டமன்ற தேர்தலும் பொது தேர்தலும் நடக்க இருப்பதால், தெலுங்கு தேசம் கட்சியை யார் வழிநடுத்துவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஜேஸ்வ்க்க்ள்

பிரபல தெலுங்கு நடிகர் என்.டி.ஆரின் பேத்தி பிராமணி 

இந்நிலையில், சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஸ்வரியும், அவரது மருமகள் பிராமணியும் கட்சியை முன்னெடுத்து வழிநடத்தி வருகின்றனர். ஆந்திராவை ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸின் தலைவர்களான ஜெகன் மோகன் ரெட்டியையும் நடிகை ரோஜாவையும் சந்திரபாபு நாயுடுவின் மருமகள் பிராமணி சமீபத்தில் கடுமையாக விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், புவனேஸ்வரியும், பிராமணியும் தெலுங்கு தேசம் கட்சி சார்பாக போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். அதனால், அடுத்தபடியாக தெலுங்கு தேசம் கட்சியை பிராமணி தான் வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிராமணி , பிரபல தெலுங்கு நடிகர் என்.டி.ஆரின் பேத்தியும் நடிகர் பாலகிருஷ்ணாவின் மகளும் ஆவார். அதனால், தெலுங்கு தேசம் கட்சியின் தொண்டர்கள் பிராமணிக்கு பெரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.