அடுத்த 3 மணி நேரத்திற்கு 6 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: பள்ளிகளுக்கு விடுமுறை உண்டா?
இன்று காலை 10 மணி வரை திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நாகை, இராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அது போக இன்று முழுவதும், தமிழகத்தின் ஒருசில பகுதிகளிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடியுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், இன்று முழுவதும், சென்னை , திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், சென்னை பகுதிகளில் பெய்து வந்த மழை குறைந்துள்ளதால், சென்னையில் பள்ளி, கல்லூரிகள் இன்று வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.