
இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்; மக்களுக்கு சுகாதார ஆலோசனையை வெளியிட்டது மத்திய அரசு
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா பாதிப்புகள் படிப்படியாக அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, மத்திய சுகாதார அமைச்சகம் ஒரு ஆலோசனையை வெளியிட்டுள்ளது.
அதில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், அதே நேரத்தில் பீதியைத் தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
சமீபத்திய பரவலில் ஏற்படும் பாதிப்புகள் பெரும்பாலானவை லேசானவை என்றும், வீட்டு தனிமைப்படுத்தலின் மூலமே சரிசெய்யப்பட்டுவிட முடியும் என்றும் சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
தற்போது பரவும் மாறுபாடுகளின் தீவிரம் அல்லது பரவும் தன்மை அதிகரிப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை.
இந்த பரவலில் கேரளா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் டெல்லி ஆகியவை அதிக எண்ணிக்கையிலான பாதிப்புக்களிக் கொண்டுள்ள மாநிலங்களாக உள்ளன.
இந்தியா
ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டம்
ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டம் (IDSP) மற்றும் ICMR இன் சென்டினல் நெட்வொர்க் தலைமையிலான இந்தியாவின் கண்காணிப்பு அமைப்பு சுவாச நோய்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் போன்ற நாடுகளில் அதிகரித்து வரும் பாதிப்புகள் குறித்து ஊடக அறிக்கைகள் குறிப்பிட்டுள்ள நிலையில், NB.1.8.1 மற்றும் LF.7 உள்ளிட்ட புழக்கத்தில் உள்ள மாறுபாடுகளின் தீவிரம் அதிகரிக்கவில்லை என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்துகின்றனர்.
இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தும் திரிபு JN.1 ஆகவே உள்ளது. குறிப்பாக நெரிசலான பகுதிகள் மற்றும் மருத்துவமனைகளில் அடிப்படை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற சுகாதார அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
கேரளா மருத்துவமனைகளில் கட்டாய முககவசம் அணிதலை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது.
பரவலைக் கட்டுப்படுத்த N95 முககவசங்கள், சானிட்டைசர்கள் ஆகியவற்றை பயன்படுத்த நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.