இந்தி மொழியினை திணிப்பதிலேயே மத்திய அரசு தீவிரம் காட்டிவருகிறது - முதல்வர் குற்றச்சாட்டு
அண்மையில் நியூ இந்தியா அசுரன்ஸ் காப்பீடு நிறுவனம் ஓர் சுற்றறிக்கையினை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் ஆங்கிலம்,இந்தி மொழிகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனைக்கண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டரில் ஓர் பதிவினை செய்துள்ளார். அதில், ஒவ்வொரு இந்திய குடிமகனும் நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்டு வரும்நிலையில், மத்திய அரசு மக்கள்நலன் குறித்து ஆலோசிக்காமல் இந்திமொழியினை திணிப்பதில் மட்டுமே தனது முழுக்கவனத்தினை செலுத்திவருகிறது. இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்களின் மொழிகளுக்கு எவ்வித முக்கியத்துவமும் கொடுக்கப்படாதநிலையில், இந்திமொழிக்கு மட்டும் தொடர்ந்து முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது என்று பதிவிட்டுள்ளார். மேலும்,"எங்கள் மரபு மற்றும் நாட்டின் பன்முகத்தன்மையில் நம்பிக்கை கொண்டுள்ளோம். எங்கள் மொழி சமமாக நடத்தப்படவேண்டும். எங்கள் மண்ணில் தமிழுக்கு பதில் இந்தி திணிக்கப்பட்டால் அதனை எதிர்ப்போம்" என்றும் குறிப்பிட்டுள்ளார்.