Loading...
10-ஆம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழுக்கு 'மூன்றாவது மொழி' கட்டாயம்: CBSE அதிரடி
மூன்றாவது மொழியை ஒரு கட்டாயத் தகுதி பாடமாக அறிவித்துள்ளது CBSE

10-ஆம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழுக்கு 'மூன்றாவது மொழி' கட்டாயம்: CBSE அதிரடி

எழுதியவர் Venkatalakshmi V
Jul 14, 2026
11:56 am

செய்தி முன்னோட்டம்

CBSE, தேசியக் கல்விக் கொள்கை (NEP 2020) வழிகாட்டுதலின்படி, 9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாவது மொழியை ஒரு கட்டாயத் தகுதி பாடமாக அறிவித்து புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. ஜூலை 10 அன்று சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள புதிய சுற்றறிக்கையின்படி, இந்த விதிமுறைகள் வரும் 2026-27 கல்வியாண்டில் 9-ஆம் வகுப்பில் நுழையும் மாணவர்களுக்கும், 2027-28 கல்வியாண்டில் 10-ஆம் வகுப்பில் நுழையும் மாணவர்களுக்கும் பொருந்தும். தற்போது 2026-27-ல் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவிருக்கும் மாணவர்களுக்கு இந்த விதியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கொள்கை

புதிய மொழிவழி கொள்கையின் முக்கிய அம்சங்கள்

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் இந்த மூன்றாவது மொழிக்குத் தேர்வுகள் நடத்தப்படாது.

ஆனால், பள்ளிகள் நடத்தும் இன்டெர்னல் தேர்வில் மாணவர்கள் கண்டிப்பாக தேர்ச்சி பெற வேண்டும்.

இதில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான 'தேர்ச்சி சான்றிதழ்' வழங்கப்படும் என சிபிஎஸ்இ தெளிவுபடுத்தியுள்ளது.

ஒருவேளை மாணவர் இன்டெர்னலில் தோல்வியடைந்தால், பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பாக பள்ளிகள் மறுதேர்வு நடத்த வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

9-ஆம் வகுப்பில் மூன்றாவது மொழிப் பாடத்தின் அகமதிப்பீட்டில் தோல்வியடையும் மாணவர்கள், 10-ஆம் வகுப்பிற்கு தடையின்றி புரமோட் செய்யப்படுவார்கள்.

இருப்பினும், அவர்கள் 10-ஆம் வகுப்பு படிக்கும் போதே, நிலுவையில் உள்ள அந்த 9-ஆம் வகுப்பு மூன்றாவது மொழித் தேர்வை எழுதித் தேர்ச்சி பெற வேண்டும்.

மனு

உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த பதில் மனு

சிபிஎஸ்இ-யின் இந்த மூன்று மொழிக் கொள்கை உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவின் மீதான விசாரணையில், மத்தியக் கல்வி அமைச்சகம் சார்பில் ஜூலை 13 அன்று 9 பக்கங்கள் கொண்ட பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், "இந்த மூன்று மொழிக் கொள்கையானது மாணவர்களிடையே பன்மொழித் திறனை வளர்க்கவும், இந்திய மொழிகளைப் பாதுகாக்கவும், மாணவர்களின் அறிவாற்றல் வளர்ச்சியை மேம்படுத்தவும், நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் கலாச்சாரப் பன்முகத்தன்மையை வலுப்படுத்தவும் கொண்டு வரப்பட்டுள்ளது" எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT