Page Loader
CBSE பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு: பிப்ரவரி 15ல் தேர்வுகள் துவக்கம்
CBSE பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

CBSE பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு: பிப்ரவரி 15ல் தேர்வுகள் துவக்கம்

எழுதியவர் Venkatalakshmi V
Nov 21, 2024
08:13 am

செய்தி முன்னோட்டம்

CBSE பொதுத்தேர்வுகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய இடைநிலை கல்வி வாரியமான சிபிஎஸ்இ-யின் கீழ் நாட்டில் பல பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பள்ளிகளில் படிக்கும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கான நடப்பு கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை சிபிஎஸ்இ நேற்று வெளியிட்டுள்ளது. அதன்படி 10ம் வகுப்பு தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் 18ஆம் தேதியும், 12ம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 4ஆம் தேதியும் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுகளுக்கான விரிவான அட்டவணையை, சிபிஎஸ்இ-வின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.cbse.gov.in மூலம் மாணவர்கள் பார்வையிடலாம். தேர்வு தொடங்க இன்னும் கிட்டத்தட்ட 86 நாட்கள் மட்டுமே உள்ளதால் மாணவர்கள் தேர்விற்கு தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post