NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சிபிஎஸ்சி அங்கீகாரம் பெற்ற பள்ளி என போலி விளம்பரம் - நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் 
    இந்தியா

    சிபிஎஸ்சி அங்கீகாரம் பெற்ற பள்ளி என போலி விளம்பரம் - நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் 

    சிபிஎஸ்சி அங்கீகாரம் பெற்ற பள்ளி என போலி விளம்பரம் - நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் 
    எழுதியவர் Nivetha P
    May 25, 2023, 06:26 pm 0 நிமிட வாசிப்பு
    சிபிஎஸ்சி அங்கீகாரம் பெற்ற பள்ளி என போலி விளம்பரம் - நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் 
    சிபிஎஸ்சி அங்கீகாரம் பெற்ற பள்ளி என போலி விளம்பரம் - நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்

    தமிழ்நாடு மாநிலம் பெரிய காஞ்சிபுரம் பகுதியினை சேர்ந்த மோதிலால் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுவினை தாக்கல் செய்தார். அதில் கடந்த 2001ம்ஆண்டு கும்பகோணம் பள்ளியில் தீ விபத்து ஏற்பட்டதில் 96 குழந்தைகள் பலியான சம்பவம் குறித்து நீதிபதி சம்பத் தலைமையிலான ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையத்தில் வகுக்கப்பட்ட விதிமுறைகள் அடிப்படையில் தனியார்பள்ளிகள் அங்கீகாரம் பெறுவதுமற்றும் பல பாதுகாப்பு நடைமுறைகள் வகுக்கப்பட்டு 2006ம்ஆண்டில் தமிழக அரசு அரசாணையினை பிறப்பித்தது. இதே சம்பவம் குறித்த வழக்கினை விசாரணை செய்த உச்சநீதிமன்றமும் பாதுகாப்பு நடைமுறைகளை சரிவர செய்யவேண்டும் என்று உத்தரவிட்டது. தொடர்ந்து, கல்விச்சட்டத்திலும் அங்கீகாரம் பெறப்படாத பள்ளிகள் இயங்கக்கூடாது என்று தெரிவித்தது. அதன்படி, பள்ளி கட்டிடஸ்திரத்தன்மை சான்று, பள்ளி கட்டிடங்களுக்கு உரிமம் என்பதுப்போன்ற நிபந்தனைகள் கொண்டுவரப்பட்டது.

    மாணவர்களை வேறு பள்ளிகளுக்கு மாற்ற நடவடிக்கை 

    மேலும் அந்தமனுவில், இதுபோன்ற சட்டங்கள் இயற்றப்பட்டும், மேன்சன் போன்ற குறிகியஅறைகள்,எவ்வித அங்கீகாரம் மற்றும் ஒப்புதல் பெறாமல் காஞ்சிபுரத்தில் விதை பப்ளிக் ஸ்கூல் என்னும் பள்ளி இயங்கிவருகிறது. இந்த பள்ளியில் சிபிஎஸ்சி அங்கீகாரம் பெறப்பட்டதாக பொய்யான விளம்பரத்தினைச்செய்து மாணவர்சேர்க்கை நடந்துவருகிறது. எனவே இந்த பள்ளி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிடுமாறு மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தநிலையில், சம்பந்தப்பட்ட பள்ளிக்கு எதிராக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து நடவடிக்கையினை தொடங்கியுள்ளதாகவும், மனுதாரர்களின் விண்ணப்பம் குறித்து பரிசீலனை செய்யப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நீதிபதிகள் பதிவுச்செய்து கொண்டதையடுத்து,மனுதாரர் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு உத்தரவினை பிறப்பிக்கவேண்டும். குறிப்பிட்ட பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அருகிலுள்ள அங்கீகாரம் பெற்ற வேறுப்பள்ளிகளுக்கு மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும் என்று உத்தரவிட்டனர்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தமிழ்நாடு
    தமிழக அரசு
    சென்னை உயர் நீதிமன்றம்

    தமிழ்நாடு

    அடுத்த 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் மழை இருக்கும்: வானிலை எச்சரிக்கை புதுச்சேரி
    எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற திறப்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டும்: நிர்மலா சீதாராமன் வேண்டுகோள்  இந்தியா
    புதிய நாடாளுமன்றத்தில் தமிழத்தின் 'செங்கோல்': தமிழர்களின் இதயங்களை தொட முயற்சிக்கிறதா பாஜக  இந்தியா
    தமிழக வளர்ச்சித்திட்ட பணிகளை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம் - தலைமைச்செயலாளர் இறையன்பு  தமிழக அரசு

    தமிழக அரசு

    சென்னை கிண்டி பல்நோக்கு மருத்துவமனையை திறந்து வைப்பதில் மாற்றம் சென்னை
    கருணாநிதி பேனா நினைவு சின்ன கட்டுமானத்தினை ஒருங்கிணைக்க அதிகாரி நியமனம் திமுக
    கன்னியாகுமரியில் நவீன சொகுசு படகு சவாரியினை துவக்கி வைத்தார் அமைச்சர் எ.வ.வேலு கன்னியாகுமாரி
    தமிழகத்தில் குட்கா பொருட்களுக்கு மேலும் ஓராண்டிற்கு தடை விதிப்பு தமிழ்நாடு

    சென்னை உயர் நீதிமன்றம்

    RTE-ல் சேரும் மாணவர்களுக்கு கட்டணம் செலுத்துவது அரசின் கடமை - சென்னை உயர்நீதிமன்றம்  தமிழ்நாடு
    நீலகிரி கோடை விழாவில் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவை திட்டத்திற்கு தடை ஊட்டி
    புகையிலைக்கு அரசு தடை விதிக்கலாம் - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு  சென்னை
    உதவி இயக்குனர் விடுதலை சிகப்பிக்கு முன் ஜாமீன் அளித்த சென்னை உயர்நீதிமன்றம்  பா ரஞ்சித்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023