கார்பன் உமிழ்வு: செய்தி
நான்கு ஆண்டுகளில் கார்பன் உமிழ்வை 18% குறைக்க வேண்டும்: உலக நாடுகளுக்கு ஐ.நா அவசர எச்சரிக்கை
பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் மோசமான பேரழிவுகளைத் தவிர்க்கவும், சர்வதேச காலநிலை இலக்குகளை மீட்டெடுக்கவும் அடுத்த 4 ஆண்டுகளில் உலகளாவிய கார்பன் உமிழ்வை 18 சதவீதமும், அடுத்த 10 ஆண்டுகளில் (2035-க்குள்) 45 சதவீதமும் குறைக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் திட்டம் (UNEP) அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.