NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / டெல்லியின் அடுத்த முதல்வராக சுனிதா கெஜ்ரிவால் தேர்வு செய்யப்படுவாரா? அரசியல் சாசன விதிகள் படி கடினம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    டெல்லியின் அடுத்த முதல்வராக சுனிதா கெஜ்ரிவால் தேர்வு செய்யப்படுவாரா? அரசியல் சாசன விதிகள் படி கடினம்
    சுனிதா கெஜ்ரிவால்

    டெல்லியின் அடுத்த முதல்வராக சுனிதா கெஜ்ரிவால் தேர்வு செய்யப்படுவாரா? அரசியல் சாசன விதிகள் படி கடினம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 16, 2024
    06:40 am

    செய்தி முன்னோட்டம்

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், நேற்று, ஞாயிற்றுக்கிழமை இரண்டு நாட்களுக்குப் பிறகு தலைமைப் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

    மேலும் மக்கள் தனக்கு "நேர்மைக்கான சான்றிதழை" வழங்கினால் மட்டுமே முதல்வராக திரும்புவேன் என்று உறுதியளித்தார்.

    ஆம் ஆத்மி கட்சி (ஏஏபி) தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடம் உரையாற்றிய அரவிந்த் கெஜ்ரிவால், தனது கட்சி சகாவும், மதுக் கொள்கை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் துணை முதலமைச்சருமான மணீஷ் சிசோடியாவை வாரிசாக நிராகரித்தார்.

    "நாங்கள் நேர்மையானவர்கள் என்று மக்கள் சொன்ன பின்னரே நானும், சிசோடியாவும் அந்தந்த பதவிகளுக்குத் திரும்புவோம்" என்று கெஜ்ரிவால் கூறினார்.

    அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த திடீர் அறிவிப்புக்குப் பிறகு, டெல்லியில் முதல்வர் பதவிக்கான சில சாத்தியமான போட்டியாளர்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

    நபர் 1

    அதிஷி

    அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் அடைக்கப்பட்ட பின்னர், அதிஷி கட்சியின் முக்கிய பொறுப்புகளை கையாண்டார். கட்சியின் அறியப்பட்ட முகமாவும், தொடர்களுக்கு இணக்கமான தலைவராகவும் அவர் திகழ்ந்து வருகிறார்.

    கொள்கை சீர்திருத்தங்களுக்கான அவரது ஆற்றல்மிக்க அணுகுமுறை மற்றும் சமூகப் பிரச்சினைகளில் அவரது வக்காலத்துக்காக அறியப்பட்ட அதிஷி, டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்ட பிறகு, வெளிப்படையான ஆம் ஆத்மி தலைவராக செயல்பட்டு வருகிறார்.

    கேபினட் அமைச்சர்களில் மிக உயர்ந்த 14 துறைகளுக்குப் பொறுப்பாக உள்ளார். அவர் கவனிக்கும் முக்கிய அமைச்சகங்கள் கல்வி, நிதி, திட்டமிடல், பொதுப்பணித்துறை, நீர், மின்சாரம் மற்றும் மக்கள் தொடர்பு ஆகியவை ஆகும்.

    அவரது வலுவான பேச்சுத்திறன் அவரை முதல்வர் பதவிக்கு முன்னணியில் உள்ளவர்களில் ஒருவராக ஆக்குகிறது.

    நபர் 2

    கைலாஷ் கஹ்லோட்

    கைலாஷ் கஹ்லோட் டெல்லியின் அரசியல் சூழ்நிலையில் ஒரு முக்கிய நபராக இருந்து வருகிறார். போக்குவரத்து அமைச்சராக அவர் பணியாற்றியதற்காக அறியப்பட்டவர்.

    அவரது தலைமையின் கீழ், டெல்லி அரசு, நகரின் போக்குவரத்து உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் கணிசமான முன்னேற்றங்களைச் செய்தது, இதில் பேருந்து சேவைகளின் விரிவாக்கம், மின்சார பேருந்துகளை அறிமுகப்படுத்துதல் மற்றும் சாலை பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் ஆகியவை அடங்கும்.

    கேபினட் அமைச்சராக இருப்பதால், கைலாஷ், தனது வலுவான நிர்வாகத் திறன்களை நிரூபித்துள்ளார்.

    கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கைலாஷ் கெஹ்லோட்டுக்கு முதலமைச்சராக வாய்ப்பு வழங்கப்படலாம்.

    நபர் 3

    சுனிதா கெஜ்ரிவால்

    சுனிதா கெஜ்ரிவால், முன்னாள் இந்திய வருவாய் சேவைகள் (IRS) அதிகாரி, அவரது கணவரைப் போலவே, இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக வருமான வரித் துறையில் பணியாற்றினார்.

    டெல்லி, ஹரியானா மற்றும் குஜராத்தில் ஆம் ஆத்மியின் மக்களவை பிரச்சாரங்களில் அவர் ஒரு முக்கிய முகமாக செயல்பட்டார்.

    அவர் பத்திரிகையாளர் சந்திப்புகளில் தவறாமல் தோன்றினார் மற்றும் சிறையிலிருக்கும் போது அரவிந்த் கெஜ்ரிவாலின் செய்திகளை மக்களிடம் நேரடியாக கொண்டு சேர்த்தார்.

    சுனிதா கெஜ்ரிவால் ஒரு முன்னாள் அதிகாரியாக இருப்பதால், அதிகாரத்துவ செயல்முறைகளை கையாள்வதிலும் டெல்லியின் பன்முக சவால்களை நிர்வகிப்பதில் பயனுள்ளதாக இருக்கும் சிக்கலான பொது அமைப்புகளைப் புரிந்துகொள்வதிலும் நிபுணத்துவம் பெற்றவர்.

    சவால்கள்

    சுனிதா முதல்வர் ஆவதில் உள்ள சவால்கள்

    சுனிதா கெஜ்ரிவால் முதல்வராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அவரது அரசியல் சாராத பின்னணி மற்றும் அரசியலமைப்பு கட்டுப்பாடுகள் தடைகளை ஏற்படுத்தலாம்.

    குறிப்பாக, சுனிதா கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சியில் உறுப்பினராக இல்லாததால், அவர் முதலில் அக்கட்சியில் சேர்ந்து ஒரு தொகுதியில் போட்டியிட்டு மூன்று மாதங்களுக்குள் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.

    ஆனால், டெல்லியில் பிப்ரவரி 2025 இல் சட்டமன்றத் தேர்தல்கள் திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இந்த நேரத்தில் இடைத்தேர்தலை நடத்துவது தேர்தல் ஆணையத்திற்கு சவாலாக இருக்கும்.

    மேலும், சுனிதா கெஜ்ரிவாலுக்கு முதல்வர் பதவி கிடைத்தால், குடும்ப அரசியல் என எதிர்க்கட்சிகள் தாக்குதல்கள் நடத்தக்கூடும் என ஆம் ஆத்மி கட்சி எச்சரிக்கையாக இருக்கும்.

    நபர் 4

    கோபால் ராய்

    கோபால் ராய், AAP க்குள் மூத்த அரசியல்வாதியாக அறியப்பட்டவர்., 49 வயதான கோபால் ராய், மாணவர் செயல்பாட்டின் பின்னணியைக் கொண்ட ஒரு அனுபவமிக்க அரசியல்வாதி ஆவார்.

    மேலும் டெல்லியின் அரசியல் களத்தில் நீண்ட காலமாக முக்கியப் பங்காற்றி வருகிறார்.

    அவர் சுற்றுச்சூழல், வனம் மற்றும் வனவிலங்கு, வளர்ச்சி மற்றும் பொது நிர்வாகத் துறைக்கான கேபினட் அமைச்சராக உள்ளார்.

    கோபால் ராய் டெல்லியின் தொழிலாள வர்க்க சமூகங்களுடனான ஆழ்ந்த தொடர்புக்காக அறியப்பட்டவர்.

    தொழிலாளர் உரிமைகள் தொடர்பான அவரது பின்னணி மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான அவரது முயற்சிகள் பரந்த அளவிலான வாக்காளர்களுடன் எதிரொலித்தது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    டெல்லி
    அரவிந்த் கெஜ்ரிவால்
    முதல் அமைச்சர்

    சமீபத்திய

    பாகிஸ்தானுடன் கிரிக்கெட் கிடையாது; ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து விலக பிசிசிஐ முடிவு பிசிசிஐ
    மே 8 அன்று பொற்கோவிலுக்கு குறிவைத்த பாகிஸ்தானின் தாக்குதலை முறியடித்த இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு பொற்கோயில்
    மோசமான பணியிட சூழல்; பெங்களூர் பொறியாளர் மரணத்தின் பின்னணியில் பகீர் குற்றச்சாட்டு பெங்களூர்
    மூன்று வெவ்வேறு ஐபிஎல் அணிகளை பிளேஆஃப்க்கு அழைத்துச் சென்று ஷ்ரேயாஸ் ஐயர் சாதனை ஐபிஎல் 2025

    டெல்லி

    அவதூறு வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சாகேத் கோகலே 50 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் என உத்தரவு திரிணாமுல் காங்கிரஸ்
    சமூக ஆர்வலர் மேதா பட்கருக்கு டெல்லி நீதிமன்றம் 5 மாத சிறைத்தண்டனை விதித்தது இந்தியா
    மதுபானக் கொள்கை வழக்கில் கே கவிதாவுக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு  இந்தியா
    இந்திய அணி இன்று பார்படாஸில் இருந்து புறப்படுகிறது! நாளை இரவு டெல்லியில் தரையிறங்கும் எனத்தகவல் இந்திய அணி

    அரவிந்த் கெஜ்ரிவால்

    2025ல் மோடி பதவி விலகுவார், ஷா பதவியேற்பார்: அரவிந்த் கெஜ்ரிவால் கணிப்பு மோடி
    ஆம் ஆத்மி எம்பி ஸ்வாதி மாலிவாலை தாக்கியதாக கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார் மீது வழக்கு பதிவு ஆம் ஆத்மி
    எம்பி ஸ்வாதி மாலிவாலின் சிசிடிவி வீடியோவை வெளியிட்டது ஆம் ஆத்மி கட்சி  டெல்லி
    சுவாதி மாலிவால் வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் இருந்து பிபவ் குமார் கைது  டெல்லி

    முதல் அமைச்சர்

    கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது POCSO வழக்கு பதிவு கர்நாடகா
    அழகிரியின் மகன், துரை தயாநிதி வேலூர் CMC மருத்துவமனையில் அனுமதி மருத்துவமனை
    பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்ய ஆளுநர் ரவி மறுப்பா?  பொன்முடி
    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 15ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் அரவிந்த் கெஜ்ரிவால்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025