LOADING...
கம்போடிய வேலைவாய்ப்பு மோசடியில் 'பாகிஸ்தான்' தொடர்பு -5,000 இந்திய இளைஞர்கள் சிக்கியது எப்படி?
இந்திய இளைஞர்களை குறிவைத்து இந்த வலையமைப்பு செயல்பட்டுள்ளது

கம்போடிய வேலைவாய்ப்பு மோசடியில் 'பாகிஸ்தான்' தொடர்பு -5,000 இந்திய இளைஞர்கள் சிக்கியது எப்படி?

எழுதியவர் Venkatalakshmi V
Jan 19, 2026
06:02 pm

செய்தி முன்னோட்டம்

கம்போடியாவில் அதிக சம்பளத்துடன் கூடிய வேலை என ஆசை காட்டி, 5,000-க்கும் மேற்பட்ட இந்திய இளைஞர்களை கடத்தி சென்று சைபர் குற்றங்களில் ஈடுபடுத்திய பெரிய லெவல் மோசடி குறித்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவகாரத்தில் உயர்மட்ட புலனாய்வு அமைப்புகள் மேற்கொண்ட தடயவியல் ஆய்வில், பாகிஸ்தானை சேர்ந்த முகவர்கள் மற்றும் அங்கிருந்து இயங்கும் இணைய முகவரிகளுக்கு (IP logs) நேரடி தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கேரளா மற்றும் தெலுங்கானா போன்ற மாநிலங்களை சேர்ந்த இளைஞர்களை குறிவைத்து இந்த வலையமைப்பு செயல்பட்டுள்ளது. இது வெறும் இணைய மோசடி மட்டுமல்ல, இந்திய இளைஞர்களை சுரண்டும் திட்டமிட்ட சதி என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

NIA

இந்திய புலனாய்வு அமைப்பின் நடவடிக்கை

இது தொடர்பாகச் சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில், சுமார் 14 லட்சம் சைபர் குற்றவாளிகளைக் கொண்ட சந்தேகத்திற்குரிய பட்டியலை இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம் (I4C) தயாரித்துள்ளது. இதன் மூலம் இதுவரை சுமார் 8,000 கோடி ரூபாய் அளவிலான மோசடிப் பண பரிவர்த்தனைகள் தடுக்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட இளைஞர்கள் அளித்த வாக்குமூலத்தின்படி, அவர்கள் கேசினோ மற்றும் கால் சென்டர் வேலைகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டு, பின்னர் ரகசிய காப்பகங்களில் அடைத்து வைக்கப்பட்டு உடல் ரீதியான சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். சீனாவைச் சேர்ந்த கும்பல்கள் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இத்தகைய சட்டவிரோத முகாம்களை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. தற்போது சிபிஐ (CBI) மற்றும் என்ஐஏ (NIA) இந்த விசாரணையை விரிவுபடுத்தியுள்ளன.

தொடர்பு

பாகிஸ்தான் உடன் தொடர்பு அம்பலம்

பாகிஸ்தானுடன் தொடர்புடைய ஐபி முகவரிகள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, மத்திய அமைப்புகள் அவற்றை 'சந்தேகத்திற்குரிய பதிவேட்டில்' சேர்த்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தேசிய சைபர் குற்ற அறிக்கையிடல் போர்ட்டலின் தரவைப் பயன்படுத்தி இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம் (I4C) உருவாக்கிய பதிவேட்டில், நிதி மோசடி மற்றும் பிற சைபர் குற்றங்களில் ஈடுபட்டுள்ள 1.4 மில்லியன் சைபர் குற்றவாளிகளின் விவரங்கள் உள்ளன. சந்தேகத்திற்குரிய தரவுத்தளம் வங்கிகளுடன் பகிரப்பட்டுள்ளது. மோசடி நிதிகளைப் பெற்ற 5,54,865 வங்கிக் கணக்குகளை முடக்கவும், 15,10,800 தனிப்பட்ட கணக்குகளை அடையாளம் காணவும், கிட்டத்தட்ட 20 லட்சம் சந்தேகத்திற்கிடமான பரிவர்த்தனைகளைத் தடுப்பதன் மூலம் ரூ.7,980 கோடி மதிப்புள்ள இழப்புகளைத் தடுக்கவும் பதிவேடு உதவியுள்ளதாக தரவு காட்டுகிறது.

Advertisement