NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / புதிய அமைச்சரவையின் இலாக்காகள் அறிவிப்பு: எந்தெந்த துறைகளுக்கு யார் அமைச்சர்? 
    அடுத்த செய்திக் கட்டுரை
    புதிய அமைச்சரவையின் இலாக்காகள் அறிவிப்பு: எந்தெந்த துறைகளுக்கு யார் அமைச்சர்? 

    புதிய அமைச்சரவையின் இலாக்காகள் அறிவிப்பு: எந்தெந்த துறைகளுக்கு யார் அமைச்சர்? 

    எழுதியவர் Sindhuja SM
    Jun 10, 2024
    07:28 pm

    செய்தி முன்னோட்டம்

    கூட்டணி ஆட்சியின் தலைவராக பதவியேற்ற பிரதமர் நரேந்திர மோடி, டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் முதல் அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தி வருகிறார்.

    பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழைகளுக்கு 3 கோடி வீடுகளை கட்டுவதற்கான திட்டங்களுக்கு அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

    இந்நிலையில், நேற்று அமைச்சராக பதவியேற்ற நிதின் கட்கரிக்கு சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

    இவர் கடந்த ஆட்சியிலும் இதே துறையை தான் நிர்வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சாலை போக்குவரத்துத்துறை இணை அமைச்சர்களாக அஜய் டாம்டா, ஹர்ஷ் மல்ஹோத்ரா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    அமைச்சர் அமித்ஷா உள்துறை அமைச்சகத்தையும், ராஜ்நாத் சிங் பாதுகாப்பு அமைச்சகத்தையும் தக்க வைத்துக் கொண்டனர்.

    இந்தியா 

     பாதுகாப்பு, உள்துறை, நிதி மற்றும் வெளியுறவு அமைச்சகங்களில் மாற்றம் இல்லை 

    நிதியமைச்சகத்தை நிர்மலா சீதாராமன் தக்கவைத்து கொண்டார்.

    மேலும், எஸ் ஜெய்சங்கர் வெளியுறவு அமைச்சகத்தை வழிநடத்தும் பொறுப்பை தொடர்வார் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது.

    மோடி 3.0 ஆட்சியில், பாதுகாப்பு, உள்துறை, நிதி மற்றும் வெளியுறவு அமைச்சகங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

    ஹரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், முதல்முறை எம்.பி.யுமான மனோகர் லால் கட்டாருக்கு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுடன் மின் துறை அமைச்சகமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    ஸ்ரீபாத் யெஸ்ஸோ நாயக் மின்துறை இணை அமைச்சராகவும், டோகன் சாஹு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் இணை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இந்தியா 

    அஸ்வினி வைஷ்ணவுக்கு தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை

    தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சராக அஸ்வினி வைஷ்ணவ் நியமிக்கப்பட்டுள்ளார். இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள ஹமிர்பூரில் நின்று ஜெயித்த பாஜக எம்.பி.யான அனுராக் தாக்குர், முந்தைய ஆட்சியில் மோடி அமைச்சரவையில் I&B அமைச்சராக இருந்தார்.

    பாஜகவின் கூட்டணிக் கட்சியான ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சாவைச் சேர்ந்த ஜிதன் ராம் மஞ்சிக்கு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை அமைச்சகம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரும், பாஜக தலைவருமான சிவராஜ் சிங் சவுகானுக்கு மோடி 3.0 அரசில் விவசாயம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய மோடி அரசில் விவசாய அமைச்சராக இருந்தவர் அர்ஜுன் முண்டா ஆவார். அப்போது சிவராஜ் சிங் ஊரக வளர்ச்சித்துறையை நிர்வகித்தார்.

    இந்தியா 

     நடிகர் சுரேஷ் கோபிக்கு சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை 

    பாஜகவின் கூட்டணிக் கட்சியான தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த ராம் மோகன் நாயுடு, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முந்தைய ஆட்சியில் ஜோதிராதித்ய சிந்தியா இந்த அமைச்சகத்தை நிர்வகித்தார்.

    குஜராத்தைச் சேர்ந்த பாஜக எம்பியான சிஆர் பாட்டீல், பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் ஜல் சக்தி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்த ஆட்சியிலும் கல்வி அமைச்சகத்தை தர்மேந்திர பிரதான் தக்கவைத்து கொண்டார்.

    கேரளாவின் ஒரே பாஜக எம்.பி.யான சுரேஷ் கோபிக்கு சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சகம் கிடைத்துள்ளது.

    பிரதமர் நரேந்திர மோடியின் முந்தைய அமைச்சரவையில் புவி அறிவியல் அமைச்சராகவும், உணவு பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சராகவும் இருந்த கிரண் ரிஜிஜு, பிரஹலாத் ஜோஷிக்குப் பதிலாக நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சகமாக நியமிக்கப்பட்டார்.

    இந்தியா 

    ஜேபி நட்டாவுக்கு சுகாதார அமைச்சகம்

    இதற்கிடையில், முந்தைய ஆட்சியில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராகப் பணியாற்றிய பிரகலாத் ஜோஷி, நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சராகவும், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

    பாஜக கூட்டணிக் கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் எம்.பி.யான எச்.டி.குமாரசாமிக்கு கனரக தொழில்துறை அமைச்சகம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    இந்தியாவின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தை பூபேந்திர யாதவ் தக்கவைத்து கொண்டார்.

    பாஜக எம்பியும், அக்கட்சியின் மூத்த தலைவருமான ஜேபி நட்டாவுக்கு மோடி 3.0-ல் சுகாதார அமைச்சகம் ஒதுக்கப்பட்டுள்ளது. மன்சுக் மாண்டவியாவுக்குப் பதிலாக ஜேபி நட்டா நியமிக்கப்படுவார்.

    முன்னாள் சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வழங்கப்பட்டுள்ளது.

    இந்தியா 

    அன்னபூர்ணா தேவிக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை 

    மத்தியப் பிரதேசத்தின் குணா தொகுதியில் வெற்றி பெற்ற ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு மோடி 3.0 அமைச்சரவையில் தொலைத்தொடர்பு அமைச்சகம் ஒதுக்கப்பட்டுள்ளது.

    கடந்த அமைச்சரவையில் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த சிந்தியாவுக்கு பதிலாக, தெலுங்கு தேசம் கட்சியின் இளம் எம்.பி.யான ராம் மோகன் நாயுடுவுக்கு தற்போது சிவில் விமானப் போக்குவரத்துத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

    லோக் ஜன் சக்தி(பாஸ்வான்) கட்சி தலைவர் சிராக் பாஸ்வான் உணவு பதப்படுத்துதல் அமைச்சகத்திற்கு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தந்தை ராம்விலாஸ் பாஸ்வான் ஒருமுறை இதே அமைச்சகத்திற்கு அமைச்சராக இருந்தவர் ஆவார்.

    முந்தைய அமைச்சரவையில் இந்திய கல்வி அமைச்சகத்தில் இணை அமைச்சராகப் பொறுப்பேற்ற பாஜக எம்பியான அன்னபூர்ணா தேவி, புதிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்தியா 

    எந்த அமைச்சருக்கும் ஒதுக்கப்படாத அனைத்து இலாகாக்களும் பிரதமர் மோடிக்கு ஒதுக்கப்பட்டது 

    வர்த்தகத்துறை அமைச்சராக பியூஷ் கோயலும், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சராக ஹர்தீப் சிங் பூரியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    அமைச்சர் லாலன் சிங் என்கிற ராஜீவ் ரஞ்சன் சிங்க்கு பஞ்சாயத்து ராஜ், மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இவர் ஜேடியூ எம்பியும், பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் நெருங்கிய நண்பரும் ஆவார்.

    பிரதமர் நரேந்திர மோடிக்கு, பணியாளர்கள், மக்கள் குறைகள், ஓய்வூதியங்கள், அணுசக்தித் துறை, விண்வெளித் துறை, அனைத்து முக்கிய கொள்கை விவகாரங்கள் மற்றும் எந்த அமைச்சருக்கும் ஒதுக்கப்படாத அனைத்து இலாகாக்களும் வழங்கப்பட்டுள்ளன.

    பாஜக தலைவரும் இணை அமைச்சருமான சர்பானந்தா சோனோவாலுக்கு துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

    இந்தியா 

    ஜி கிஷன் ரெட்டிக்கு நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை 

    ஒடிசா மாநில பாஜக எம்.பி.யான ஜுவல் ஓரமுக்கு பழங்குடியினர் நலத்துறை அமைச்சகம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஜவுளித்துறை அமைச்சராக கிரிராஜ் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

    நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சராக ஜி கிஷன் ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.

    உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த பாஜகவின் கூட்டணிக் கட்சியான ராஷ்டிரிய லோக்தளத்தின் எம்.பி.யான ஜெயந்த் சவுத்ரி பாஜக அமைச்சரவையில் இணை அமைச்சராக(சுயேச்சைப் பொறுப்பு) நுழைந்துள்ளார். அவருக்கு திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் மற்றும் கல்வி அமைச்சகத்தின் இணை அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது.

    கர்பூரி தாக்கூரின் மகனும், ஜேடியூ எம்பியுமான ராம்நாத் தாக்கூர், விவசாயம் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் இணை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மத்திய அரசு
    இந்தியா
    பாஜக
    பிரதமர் மோடி

    சமீபத்திய

    ஹிருத்திக் ரோஷனும் ஜூனியர் NTR நடிக்கும் 'வார் 2' டீஸர் வெளியானது படத்தின் டீசர்
    இந்தியா- பாகிஸ்தான் போர் காரணமாக நிறுத்தப்பட்ட அட்டாரி-வாகா எல்லை கொடியிறக்க விழா இன்று முதல் மீண்டும் தொடக்கம் இந்தியா
    இனி, நீதித்துறை சேவையில் சேர குறைந்தபட்சம் 3 ஆண்டு வழக்கறிஞர் பயிற்சி தேவை: உச்ச நீதிமன்றம் உத்தரவு உச்ச நீதிமன்றம்
    கடந்த 10 நாட்களில் இந்தியாவில் 164 கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன கோவிட் 19

    மத்திய அரசு

    சாந்தன் இலங்கை செல்ல ஒரு வாரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும்: மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    'MSP குழுவுக்கான உறுப்பினர்களை விவசாய அமைப்புகள் ஒருபோதும் பரிந்துரைக்கவில்லை': மத்திய அரசு குற்றச்சாட்டு  டெல்லி
    பஞ்சாபில் ரயில்களை மறித்து விவசாயிகள் போராட்டம் நடத்த திட்டம்; மத்திய அரசுடன் விரைவில் பேச்சுவார்த்தை எனத்தகவல் விவசாயிகள்
    மத்திய அரசுடன் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லை; பாரத் பந்த்திற்கு அழைப்பு விடுத்த விவசாய சங்கங்கள் விவசாயிகள்

    இந்தியா

    மேற்கு வங்காளத்தில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவின் போது பெரும் வன்முறை மேற்கு வங்காளம்
    நடிகர் சல்மான் கானை கொல்ல திட்டமிட்ட கும்பல்: துப்பாக்கிச்சூடு நடத்திய 4 பேர் கைது பாலிவுட்
    வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாக பெரும் கூட்டத்தை நடத்தியது 'இண்டியா' கூட்டணி கட்சிகள்  பொதுத் தேர்தல் 2024
    பொது தேர்தல் கருத்துக்கணிப்பு: தமிழகத்தில் 1-3 இடத்தில் தாமரை மலரும்; மோடி மீண்டும் பிரதமர் ஆவதற்கு அதிக வாய்ப்பு பாஜக

    பாஜக

    'மோடிக்கு 75 வயது ஆனாலும் அவர் தான் பிரதமராக வருவார்': அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமித்ஷா பதில் இந்தியா
    முஸ்லீம் பெண்களிடம் முகத்தை காட்டுமாறு கூறிய பாஜக வேட்பாளர் மீது வழக்கு பதிவு  ஹைதராபாத்
    புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பாஜக மூத்த தலைவர் சுஷில் மோடி நேற்று இரவு காலமானார் புற்றுநோய்
    குடியுரிமை சட்டத்திற்கு கீழ் முதல் முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ் வழங்கப்பட்டது இந்தியா

    பிரதமர் மோடி

    'என் தந்தையின் உடலை துண்டுகளாக நான் வீட்டிற்கு கொண்டு வந்தேன்': பிரியங்கா காந்தி  குஜராத்
    'இந்து மதத்தை சேர்ந்த அரசகர்களை மட்டுமே காங்கிரஸ் விமர்சிக்கிறது': பிரதமர் மோடி காட்டம்  இந்தியா
    தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து பிரதமர் மோடியை தகுதி நீக்கம் செய்யக் கோரிய மனுவை நிராகரித்தது டெல்லி உயர் நீதிமன்றம்  டெல்லி
    "தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்களைப் போல் இருக்கிறார்கள்" என்று கூறிய காங்கிரஸ் தலைவருக்கு பிரதமர் மோடி கண்டனம்  காங்கிரஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025