
போக்குவரத்து ஊழியர்கள் ஸ்ட்ரைக்: நாளை பேருந்துகள் இயங்கும் என அமைச்சர் உறுதி
செய்தி முன்னோட்டம்
போக்குவரத்து கழகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும், ஓய்வு பெற்ற போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும், வாரிசு பணி நியமனங்களை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நாளை முதல் வேலை நிறுத்தம் செய்யப்போவதாக ஏற்கனவே அறிவித்திருந்தது.
இதையடுத்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், தொழிற்சங்க நிர்வாகிகளுடன் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
எனினும் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.
தொடர்ந்து, இன்றும், போக்குவரத்து தொழிற்சங்கங்களுடனான முத்தரப்பு பேச்சுவார்த்தை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்றது.
எனினும் இரு தரப்பிற்கும் இடையே உடன்பாடு எட்டாத காரணத்தால், தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தை தொடர்வது என முடிவெடுத்துள்ளனர்.
card 2
பேருந்துகள் வழக்கம் போல இயங்கும் என அமைச்சர் அறிவிப்பு
போக்குவரத்து சங்கங்கள் வேலைநிறுத்தத்தை தொடர்வதாக அறிவித்த நிலையில், நாளை பேருந்துகள் வழக்கம் போல இயங்கும் என்று அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது,"தொமுச உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் நாளை பணியில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர் அதனால் பேருந்துகள் உறுதியாக இயங்கும். 2 கோரிக்கைகளை ஏற்பதாக ஏற்கனவே போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. மற்ற கோரிக்கைகள் குறித்து பொங்கலுக்கு பிறகு முடிவு எடுக்கப்படும்" என தெரிவித்தார்.
இது குறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
பொங்கலுக்கு பிறகு அனைத்து அரசு பேருந்துகளும் கிளம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து இயங்கும் எனவும் அவர் இத்தருணத்தில் தெரிவித்தார்.
ட்விட்டர் அஞ்சல்
அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை
#BREAKING || அதிகாரிகளுடன் அமைச்சர் சிவசங்கர் ஆலோசனை
— Thanthi TV (@ThanthiTV) January 8, 2024
திட்டமிட்டபடி நாளை வேலைநிறுத்தம் என போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ள நிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அதிகாரிகளுடன் ஆலோசனை
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனையில் போக்குவரத்து துறை உயரதிகாரிகள்,… pic.twitter.com/C2xu9520F4
card 3
சங்க நிர்வாகிகள் கூறுவது என்ன?
எனினும், பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால், வேலை நிறுத்தத்தை திட்டமிட்டபடி தொடங்கவுள்ளதாக சங்க நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
"அறிவித்தபடி வேலைநிறுத்தம் நாளை முதல் தொடங்குகிறது. அதனால், தமிழ்நாட்டில் நள்ளிரவு 12 மணிக்கு மேல் எந்த பேருந்துகள் ஓடாது. நகருக்குள் தொலைதூரம் செல்லக்கூடிய பேருந்துகள், இன்று நள்ளிரவு 11:59 மணி வரை மட்டுமே இயக்கப்படும்."
"ஆனால், நீண்டதூரம் (மாவட்டங்களுக்கிடையே) செல்லும் பேருந்துகள், நாளை காலை சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு சென்று பயணிகளை இறக்கி விட்ட பின் அங்கேயே நிறுத்தி வைக்கப்படும்" என சிஐடியு சங்கம் சார்பாக செளந்தரராஜன் தெரிவித்தார்.