
மதுபானக் கொள்கை வழக்கில் பிஆர்எஸ் தலைவர் கே.கவிதா சிபிஐயால் கைது
செய்தி முன்னோட்டம்
மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் ஏற்கனவே அமலாக்க இயக்குநராகத்தால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிஆர்எஸ் தலைவர் கே.கவிதா, அதே வழக்கில் தற்போது சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தெலுங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகள் கே.கவிதா, "சவுத் குரூப்" இன் முக்கிய உறுப்பினர் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
அவர் கடந்த செவ்வாய்க்கிழமை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.
ஹைதராபாத்தில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ் இல்லத்தில் இருந்து கே.கவிதா மார்ச் 15 ஆம் தேதி அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்டார்.
சிறப்பு நீதிமன்றத்தில் அனுமதி பெற்று, சிறைக்குள் கவிதாவிடம் சிபிஐ அதிகாரிகள் சமீபத்தில் விசாரணை நடத்தினர்.
ட்விட்டர் அஞ்சல்
கவிதா சிபிஐயால் கைது
NewsUpdate | கவிதா சிபிஐயால் கைது
— Win News Prime (@winnewstamil) April 11, 2024
#WinNews | #Telungana | #kavithaarrested | #CBI pic.twitter.com/Ha9P2WR5PW