
மிட்டாய் சாப்பிட சொல்லி வற்புறுத்திய மணமகனை கன்னத்தில் அறைந்த மணப்பெண் - மேடையில் பரபரப்பு
செய்தி முன்னோட்டம்
மீண்டும் திருமண சீசன் துவங்கிய நிலையில், தற்போது அதிக திருமண நிகழ்ச்சிகள் நடக்கிறது. அதில் நடக்கும் சில ஸ்வாரஸ்யமான விஷயங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அந்த வகையில் மணமேடையில் மணமகனும், மணப்பெண்ணும் ஒருவரை ஒருவர் அடித்து சண்டை போட்டுக்கொள்ளும் வீடியோ ஒன்று பெருமளவில் பகிரப்பட்டு வருகிறது.
அந்த வீடியோவில் மணமகன், மணப்பெண்ணிற்கு மிட்டாய் ஒன்றினை ஊட்டி விடுகிறார். அது தனக்கு வேண்டாம் என்று மணப்பெண் மறுத்தும் அவர் வற்புறுத்தியதால் ஆத்திரமடைந்த மணப்பெண், அவர் கையை தட்டிவிட்டு ஓங்கி கன்னத்தில் 'பளார்' என்று அறைந்து விடுகிறார்.
ட்விட்டர் அஞ்சல்
மணமகனை அறையும் வீடியோ!
Kalesh B/w Husband and Wife in marriage ceremony pic.twitter.com/bjypxtJzjt
— Ghar Ke Kalesh (@gharkekalesh) December 13, 2022
வைரல் ஆகும் வீடியோ பதிவு
மேடையிலேயே சண்டையிட்டு கொள்ளும் ஜோடி
இதனை தொடர்ந்து ஒருவரை ஒருவர் மிகுந்த கோபத்துடன் மேடையிலேயே அடித்து சண்டை போட்டு கொள்கிறார்கள்.
சமூக வலைத்தளங்களில் 62 ஆயிரத்திற்கு மேல் பார்வையாளர்கள் இந்த வீடியோவை பார்த்துள்ள நிலையில், 'இவர்கள் எப்படி ஒற்றுமையாக ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து திருமண வாழ்க்கையினை வாழ்வார்கள்' என்றும்,
இன்னும் சிலர் 'இந்த சம்பவத்திற்கு பிறகு இவர்களுக்கு திருமணம் நடப்பதே சந்தேகம் தான்' என்றும், அவரவர் தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள்.
இந்த வீடியோ தற்போது அதிக பேரால் பகிரப்பட்டு ட்ரெண்டிங் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.