Loading...
ரஷ்ய அதிபர் புடினுக்கு பிரதமர் மோடி அளித்த மாஸ் பரிசு; தமிழ் இலக்கியத்தின் பெருமையை உலகரங்கில் உயர்த்திய நெகிழ்ச்சித் தருணம்
ரஷ்ய அதிபர் புடினுக்கு பிரதமர் மோடி அளித்த மாஸ் பரிசு

ரஷ்ய அதிபர் புடினுக்கு பிரதமர் மோடி அளித்த மாஸ் பரிசு; தமிழ் இலக்கியத்தின் பெருமையை உலகரங்கில் உயர்த்திய நெகிழ்ச்சித் தருணம்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 11, 2026
04:44 pm

செய்தி முன்னோட்டம்

BRICS உச்சிமாநாட்டின் இடையே நடைபெற்ற இருதரப்புச் சந்திப்பின் போது, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு பிரதமர் நரேந்திர மோடி திருக்குறளின் ரஷ்ய மொழிபெயர்ப்பு புத்தகத்தை பரிசாக வழங்கியுள்ளார். தமிழ் மொழியின் தொன்மையான இலக்கியப் படைப்பை உலகத் தலைவருக்குப் பரிசளித்ததன் மூலம் தமிழ் கலாச்சாரத்தின் பெருமை உலகளவில் மீண்டும் மிளிர்ந்துள்ளது. பொய்யாமொழிப் புலவர் திருவள்ளுவரால் இயற்றப்பட்ட திருக்குறள், தமிழ் இலக்கியத்தின் தலைசிறந்த நீதி நூல்களில் ஒன்றாகும். எந்தவொரு குறிப்பிட்ட மதம், சாதி அல்லது மொழியையும் சாராமல் அனைத்து மனிதர்களுக்கும் பொதுவான வாழ்வியல் நெறிமுறைகளை வழங்குவதால் இது 'உலகப் பொதுமறை' என்று போற்றப்படுகிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

முக்கிய அம்சங்கள்

மோடி - புடின் சந்திப்பின் முக்கிய அம்சங்கள்

இந்த சந்திப்பின் முக்கிய நோக்கமாக இந்தியா - ரஷ்யா இடையேயான இருதரப்பு வர்த்தகத்தை 2030-ஆம் ஆண்டிற்குள் 100 பில்லியன் டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும் அணுசக்தி ஒத்துழைப்பு, சுரங்கத் துறை, தொழில்துறை உற்பத்தி, ரயில்வே மற்றும் சுரங்கப்பாதை திட்டங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்யாவில் திறமைவாய்ந்த இந்தியத் தொழிலாளர்களுக்கான வேலைவாய்ப்புகளை விரிவாக்குவது குறித்தும் ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.

ADVERTISEMENT