80 டெல்லி பள்ளிகளுக்கு மின்னஞ்சல்கள் மூலம் வெடிகுண்டு மிரட்டல்; தேர்வுகள் நிறுத்தி வைப்பு
டெல்லியில் செயல்பட்டு வரும் கிட்டத்தட்ட 80 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக, அங்கே போலீஸ் அதிகாரிகளும், வெடிகுண்டு நிபுணர்களும் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கிழக்கு டெல்லி மயூர் விஹாரில் உள்ள மதர் மேரி பள்ளி, துவாரகாவில் உள்ள டெல்லி பப்ளிக் பள்ளி உள்ளிட்ட 80 பள்ளிகளுக்கு இந்த வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இவற்றில் குறிப்பாக மதர் மேரி பள்ளியில் இன்று ஒரு தேர்வு நடைபெற்று கொண்டிருந்ததாகவும், தேடுதல் பணிகள் தொடங்கியதால் அதை பாதியிலேயே நிறுத்த வேண்டியிருந்தது எனவும் கூறப்படுகிறது. அதோடு பாதுகாப்பை கருத்தில் கொண்டு, அனைவரையும் உடனடியாக வளாகத்தை விட்டு வெளியேறுமாறும் பள்ளி நிர்வாகம் கேட்டுக் கொண்டது.
வெடிகுண்டு மிரட்டல்
#DelhiSchool #Bomb #Threat: Several schools across Delhi Ncr has received a bomb threat on Wednesday morning, after which the students were evacuated. The bomb disposal squads and fire tenders arrived at the scene immediately. Read More: https://t.co/J0Q2cU7GiU#BombDisposal... pic.twitter.com/iyRzpC4Obb— Jagran English (@JagranEnglish) May 1, 2024