பீகாரில் 30 பள்ளி மாணவர்களை ஏற்றிச்சென்ற படகு கவிழ்ந்து விபத்து
பீகார் மாநிலத்தில் உள்ள பாக்மதி என்னும் நதியில் 30 பள்ளி மாணவர்களை ஏற்றிச்சென்ற படகு திடீரென கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல் கிடைத்த நிலையில் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் மீட்பு பணியினை தீவிரப்படுத்தி 20 மாணவர்களை மீட்டுள்ளனர். மற்ற 10 மாணவர்களின் நிலை என்ன? என்று தெரியாத நிலையில் தொடர்ந்து அவர்களை மீட்டெடுக்கும் நோக்கில் மீப்பு குழுவினர் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார், "மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உயரதிகாரிகளை சம்பவயிடத்திற்கு செல்ல வலியுறுத்தியுள்ளேன். அதேபோல், மீட்புப்பணிகளை தீவிரப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று கூறியுள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மாநில அரசு சார்பில் அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.