அருணாச்சல பிரதேசத்தில் தொடர்ந்து 3வது முறையாக ஆட்சியமைக்க உள்ளது பாஜக
31 இடங்களில் வெற்றி பெற்று அருணாச்சல பிரதேசத்தில் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளதால், அருணாச்சல் மாநில அலுவலகத்திற்கு வெளியே கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. இந்நிலையில், பாஜக தலைவர்களுக்கு முதல்வர் பெமா காண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய தேர்தல் ஆணையத்தின் (இசிஐ) கூற்றுப்படி, அருணாச்சல பிரதேசத்தில் மொத்தமுள்ள 60 இடங்களுள் 32 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. இதில் 10 தொகுதிகளில் பாஜக போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளது. மேலும் அருணாச்சல பிரதேசத்தில் மேலும் 13 இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது.
ஒரு தொகுதியில் கூட காங்கிரஸ் வெற்றிபெறவில்லை
அருணாச்சல் தேசிய மக்கள் கட்சி(NPEP) இரண்டு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் மூன்று இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அருணாச்சல மக்கள் கட்சி(பிபிஏ) இரண்டு இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் கட்சி(என்சிபி) மூன்று இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன. ECI தரவுகளின்படி, சுயேச்சைகள் ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளனர். மேலும் இரண்டு இடங்களில் முன்னிலை பெற்றுள்ளனர். அருணாச்சல் முதல்வரும், பாஜக தலைவருமான பெமா காண்டு மூன்றாவது முறையாக ஆட்சியமைக்க உள்ளார். 60 உறுப்பினர்களைக் கொண்ட அருணாச்சல பிரதேச சட்டசபைக்கு, ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே முக்கியப் போட்டி நிலவுகிறது. ஆனால், பாஜக 60 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தி நிலையில், காங்கிரஸ் 19 இடங்களில் மட்டுமே போட்டியிட்டது. ஆனால், ஒரு தொகுதியில் கூட காங்கிரஸ் வெற்றிபெறவில்லை.