Page Loader
உச்ச நீதிமன்ற கெடு முடிவடைந்ததை அடுத்து பில்கிஸ் பானோ குற்றவாளிகள் குஜராத்தில் சரண்

உச்ச நீதிமன்ற கெடு முடிவடைந்ததை அடுத்து பில்கிஸ் பானோ குற்றவாளிகள் குஜராத்தில் சரண்

எழுதியவர் Sindhuja SM
Jan 22, 2024
10:36 am

செய்தி முன்னோட்டம்

2002 ஆம் ஆண்டு பில்கிஸ் பானோ கூட்டுப் பலாத்கார வழக்கில் தண்டனை பெற்ற 11 பேரும் உச்ச நீதிமன்றம் விதித்த காலக்கெடுவுக்கு இணங்க ஞாயிற்றுக்கிழமை இரவு குஜராத் சிறையில் சரணடைந்தனர். பஞ்சமஹால் மாவட்டத்தில் உள்ள கோத்ரா துணை சிறையில் அவர்கள் சரணடைந்தனர். "11 குற்றவாளிகளும் ஞாயிற்றுக்கிழமை இரவு சிறை அதிகாரிகளிடம் சரணடைந்துள்ளனர்" என்று உள்ளூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் என்.எல்.தேசாய் தெரிவித்தார். 2002-ம் ஆண்டு குஜராத் கலவரத்தின் போது பில்கிஸ் பானோ என்பவரை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவரது குடும்ப உறுப்பினர்கள் 7 பேர் கொலை செய்யப்பட்டனர். 2002 குஜராத் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்குப் பிறகு வெடித்த கலவரத்தில் இருந்து தப்பிச் செல்லும் போது பில்கிஸ் பானோ பலாத்காரம் செய்யப்பட்டார்.

க்ஜட்வ

குற்றவாளிகள் 2 வாரங்களுக்குள் சரணடைய உத்தரவு 

அப்போது அவர் 21 வயது கர்ப்பிணியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கின் 11 குற்றாவளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டிருந்தது. அவர்கள் தொடர்ந்து 20 வருடங்களாக சிறை தண்டனை அனுபவித்து வந்த நிலையில், வழக்கற்றுப் போன சட்டத்தின் அடிப்படையில் குற்றவாளிகளை 2022 சுதந்திர தினத்தன்று குஜராத் அரசு விடுதலை செய்தது. இந்நிலையில், குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக பில்கிஸ் பானோ உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை இரண்டு வாரங்களுக்கு முன் விசாரித்த நீதிமன்றம், குற்றவாளிகளை விடுவிக்க குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவித்தது. அதனால், விடுவிக்கப்பட்ட குற்றவாளிகள் 2 வாரங்களுக்குள் சரணடைய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவுக்கு இணங்க குற்றவாளிகள் 11 பேரும் நேற்று சரணடைந்துள்ளனர்.