Page Loader
17 சிறுவனை பைக் ஓட்ட அனுமதித்த தந்தை கைது - போலீசார் அதிரடி நடவடிக்கை
பைக் வீலிங்கில் ஈடுபட்ட 17 வயது சிறுவன்

17 சிறுவனை பைக் ஓட்ட அனுமதித்த தந்தை கைது - போலீசார் அதிரடி நடவடிக்கை

எழுதியவர் Nivetha P
Dec 27, 2022
10:33 pm

செய்தி முன்னோட்டம்

சென்னை எல்டாம்ஸ் சாலை அருகே இளைஞர் ஒருவர் பைக் சாகசத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவியது. இது குறித்து பாண்டிபஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். 70க்கும் அதிகமான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர். இதில் அந்த பைக் சாகசத்தில் ஈடுபட்டது, மதுரவாயல் தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வரும் 17 வயது மாணவன் என்பது தெரியவந்துள்ளது. அந்த மாணவனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில், ஓட்டுநர் உரிமம் இன்றி அந்த சிறுவன் வண்டி ஒட்டியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, அச்சிறுவனையும், வாகனத்தை ஓட்ட அனுமதித்த அவனின் தந்தையான மெக்கானிக் வேலை செய்யும் கோபால் என்பவரையும் போலீசார் கைது செய்தது.

சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் சிறுவன் அடைப்பு

தந்தை மற்றும் மகனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார்

அதனையொட்டி, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வாகனம் ஓட்டுதல், ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டுதல், 18 வயது நிரம்பாதவர்களை வாகனம் ஓட்ட அனுமதித்தல் போன்ற பிரிவுகளின் கீழ் கைதான தந்தை மற்றும் மகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தது. இதனையடுத்து இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பைக் ஒட்டிய சிறுவன் 18 வயது நிரம்பாதவர் என்பதால் அவரை சீர்திருத்த பள்ளியிலும், அவரது தந்தையை சிறையிலும் அடைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னதாக சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் 18 வயது நிரம்பாத சிறுவனும், ஓட்டுநர் உரிமம் இல்லாத இளைஞரும் ஸ்பீடோ மீட்டரில் அதிவேகத்தை பதிவு செய்ய 114 கிமீ வேகத்தில் சென்று விபத்துக்குள்ளாகி பரிதாபமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.