'பெண்களை கருவுற செய்தால் ரூ.13 லட்சம் வெல்லலாம்': க்ரியேட்டிவ்வாக மோசடி செய்த 8 பேர் கைது
பீகாரின் நவாடா மாவட்டத்தில், கற்பமாக முடியாத பெண்களை கற்பமாக்குவதற்கு ஆட்களை வேலைக்கு எடுத்த எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கற்பமாக முடியாத பெண்களை கற்பமாக்கினால் ரூ.13 லட்சத்தை வெல்லும் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறி ஒரு கூட்டம் ஆட்களை எடுத்ததாகவும், அதற்கு பதிவுக் கட்டணமாக ஒவ்வொருவரிடமும் ரூ.799 வசூலித்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. "அனைத்திந்திய கர்ப்பிணி வேலை முகமை" என்ற பதாகையின் கீழ் இந்த மோசடி நடந்துள்ளது. போலீசார் கடந்த வெள்ளிக்கிழமை அந்த கும்பலைபிடித்தனர். ஆனால் அந்த கூட்டத்தின் தலைமையாக செயல்பட்ட முன்னா குமார் தலைமறைவாகிவிட்டார்.
வாட்ஸ்அப் மூலம் நடந்த நூதன மோசடி
முன்னா குமார் என்பவர் மக்களை வாட்ஸ்அப் எண்கள் மூலம் தொடர்பு கொண்டு குழந்தை பெற முடியாத பெண்களை கருவுற செய்ய உதவி கோரி இருக்கிறார். ஆர்வமுள்ளவர்களிடம் முன்னா குமாரின் ஏஜென்சி ரூ.799 பதிவுக் கட்டணமாக வசூலித்திருக்கிறது. அதன் பிறகு, பதிவு கட்டணத்தை செலுத்தியவர்களுக்கு பல பெண்களின் புகைப்படங்கள் அனுப்பப்பட்டதாகவும், அந்த புகைப்படங்களில் இருக்கும் யாரேனும் ஒருவரை பதிவு கட்டணம் செலுத்தியவர்கள் கருவுற செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. அவர்கள் அதில் ஒரு பெண்ணின் புகைப்படத்தை தேர்ந்தெடுத்ததும், அந்த பெண்ணின் அழகை பொறுத்து மேலும் ரூ. 5,000- ரூ. 20,000 வரை செக்யூரிட்டி தொகை அவர்களிடம் வசூலிக்கப்பட்டிருக்கிறது. இந்த நூதன மோசடியை செய்த 8 பேரை கைது அவர்களது மொபைல் போன்களையும் போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.