சபிக்கப்பட்ட நதியாக கருதப்படும் பீகார் கர்மநாசா நதி
பீகாரில் கைமூர் மாவட்டத்தில் உருவாகி இந்திய மாநிலங்களான உத்திரப்பிரேதேசம் வழியே பாய்கிறது இந்த கர்மநாசா நதி. 'கர்மா' என்றால் செயல்கள், 'நாசா' என்றால் அழித்தல் என்று பொருள்படும் இந்த நதி உமிழ் நீரால் உருவானது என்றும் கூறப்படுகிறது. இதனை தொட்டால் தங்கள் புண்ணியங்கள் அனைத்தும் போய்விடும் என்றும், இந்நீரை பருகினாலோ, சமைத்தாலோ மரணம் நிச்சயம் என்று அந்த ஊர் மக்கள் கூறுகிறார்கள். இதற்கு அவர்கள் ஓர் புராண கதையும் கூறுகிறார்கள். அதன்படி, திரிசங்கு என்னும் அரசன் உயிரோடு இருக்கும்போதே சொர்கத்துக்கு செல்ல ஆசைப்பட்டு வசிஷ்டரிடம் கேட்டுள்ளார். அவர் மறுத்ததால் அவரது எதிரியான விஷ்வாமித்திரர் தேடி சென்று வசிஷ்டர் சாபத்தை பெற்றதாக தெரிகிறது. இருப்பினும், விஷ்வாமித்திரர் தனது தவவலிமையால் திரிசங்கை உயிரோடு சொர்க்கத்திற்கு அனுப்பிவைத்துள்ளார்.
விஷத்தன்மை கொண்டதாக கருதப்படும் 'கர்மநாசா' நதி
விதிப்படி அது தவறு என்பதால் பாதி வழியிலேயே திரிசங்கை இந்திரன் நிறுத்தி திருப்பி அனுப்பியுள்ளார். தனக்கு மரியாதை குறையாகிவிடும் என்று எண்ணிய விஷ்வாமித்திரர் கீழ்நோக்கி வந்தவரை வான்வெளியிலேயே நிறுத்தியுள்ளார். இதனால் தலைகீழாக தொங்கிய திரிசங்கின் வாயிலிருந்து உமிழ் நீரானது பூமியில் விழுந்துள்ளது. அதன்மூலம் தான் இந்த நதி உருவானதாக கூறப்படும் நிலையில், வசிஷ்டர் சாபத்தை பெற்றவரது உமிழ்நீர் என்பதால் அதுவும் சாபத்தை பெற்றது. அதனால் இந்த நதி சபிக்கப்பட்டதாக அந்த ஊர் மக்கள் கூறுகிறார்கள். இதன் காரணமாக அந்த நதியோரம் இருக்கும் மக்களும் நதி நீரை பருகவோ, சமைக்கவோ பயன்படுத்துவதில்லை என்று கூறப்படுகிறது.