LOADING...
உலகளவில் போக்குவரத்து நெரிசலில் உலகிலேயே பெங்களூருக்கு 2வது இடம்! ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்
உலகின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்கள் பட்டியலில் பெங்களூருக்கு 2வது இடம்

உலகளவில் போக்குவரத்து நெரிசலில் உலகிலேயே பெங்களூருக்கு 2வது இடம்! ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்

எழுதியவர் Sekar Chinnappan
Jan 22, 2026
07:10 pm

செய்தி முன்னோட்டம்

2025 ஆம் ஆண்டிற்கான உலகின் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களின் பட்டியலை டாம்டாம் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த அதிர்ச்சியூட்டும் பட்டியலில், கர்நாடக தலைநகர் பெங்களூர் உலக அளவில் இரண்டாவது இடத்தையும், இந்திய அளவில் முதலிடத்தையும் பிடித்துள்ளது. அதேபோல், மகாராஷ்டிராவின் புனே நகரம் உலக அளவில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. மெக்சிகோ சிட்டி முதலிடத்தில் உள்ளது.

டிராஃபிக்

பெங்களூரின் டிராஃபிக் நிலவரம்

பெங்களூரில் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதை இந்த ஆய்வு உறுதிப்படுத்துகிறது: பயண நேரம்: பெங்களூருவில் 10 கி.மீ தூரத்தைக் கடக்க சராசரியாக 36 நிமிடங்கள் 9 வினாடிகள் ஆகிறது. இது 2024-ஆம் ஆண்டை விட 2 நிமிடங்கள் அதிகம். இழப்பு: 2025 ஆம் ஆண்டில் ஒரு சராசரி வாகன ஓட்டி போக்குவரத்து நெரிசலில் மட்டும் 168 மணிநேரத்தை (சுமார் 7 நாட்கள் 40 நிமிடங்கள்) இழந்துள்ளார். வேகம்: காலை நேரங்களில் சராசரி வேகம் மணிக்கு 14.6 கி.மீ ஆகவும், மாலை நேரங்களில் 13.2 கி.மீ ஆகவும் குறைந்துள்ளது.

புனே

புனே நகரத்தின் நிலை

புனே நகரமும் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கிறது: பயண நேரம்: இங்கு 10 கி.மீ தூரத்தைக் கடக்க சராசரியாக 33 நிமிடங்கள் 20 வினாடிகள் தேவைப்படுகிறது. இழப்பு: புனேவாசிகள் போக்குவரத்து நெரிசலில் ஆண்டுக்கு 152 மணிநேரத்தை (சுமார் 6 நாட்கள் 8 மணிநேரம்) இழக்கின்றனர். நெரிசல் அளவு: 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் புனேவில் போக்குவரத்து நெரிசல் 5.4 சதவீதம் அதிகரித்துள்ளது.

Advertisement

தீர்வு

காரணங்களும் தீர்வுகளும்

அதிகரித்து வரும் மக்கள் தொகை, வாகனங்களின் எண்ணிக்கை உயர்வு மற்றும் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாததே இந்த நெரிசலுக்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன. பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துவது, மெட்ரோ ரயில் சேவைகளை விரைவுபடுத்துவது மற்றும் சாலைகளை விரிவுபடுத்துவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் மட்டுமே இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காண முடியும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement