Page Loader
பெங்களூரு: 'லிவ் இன்' காதலியை குக்கரால் அடித்து கொன்ற நபர் கைது 
அதிக ரத்த இழப்பு காரணமாக பாதிக்கப்பட்ட பெண் உயிரிழந்தார்

பெங்களூரு: 'லிவ் இன்' காதலியை குக்கரால் அடித்து கொன்ற நபர் கைது 

எழுதியவர் Sindhuja SM
Aug 28, 2023
12:39 pm

செய்தி முன்னோட்டம்

பெங்களூருவில் 24 வயது பெண் ஒருவரை அவரது காதலர் பிரஷர் குக்கரால் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்பத்தியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட வைஷ்ணவ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் கடந்த சனிக்கிழமை மாலை பேகூர் பகுதியில் நடந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். மேலும், அதிக ரத்த இழப்பு காரணமாக பாதிக்கப்பட்ட பெண் உயிரிழந்தார் என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது. கேரளாவை சேர்ந்த வைஷ்ணவ்(24) மற்றும் தேவா(24) ஆகிய இருவரும் பெங்களூரில் மூன்று ஆண்டுகளாக ஒரே வீட்டில் வசித்து வந்தனர். அவர்கள் இருவருக்கும் கல்லூரியில் இருந்தே ஒருவரையொருவர் தெரியும். இருவரும் பெங்களூரு கோரமங்களாவில் உள்ள விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர்.

டியூவ்க்

கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது

இந்நிலையில், தனது காதலி கள்ளத்தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகித்த வைஷ்ணவ், அடிக்கடி தேவாவுடன் இது குறித்த வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். அதே போல், கடந்த சனிக்கிழமையும் அவர்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அந்த வாக்குவாதத்தின் போது கோபமடைந்த வைஷ்ணவ், தனது காதலியை பிரஷர் குக்கரால் அடித்துக் கொன்றார். இது குறித்து மேலும் விசாரணை நடந்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பேகூர் காவல் நிலையத்தில் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் நடந்த பிறகு, தேவாவின் சகோதரி தனது அக்காவை தொடர்பு கொள்ள முடியவில்லை என்பதால், பக்கத்து வீட்டுக்காரரைத் தொடர்பு கொண்டிருக்கிறார். இதையடுத்து, இந்த கொலை சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இது குறித்து அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.