Loading...
"5 நட்சத்திர நட்சத்திர ஹோட்டல்களா இது?" அழுகிய இறைச்சி, பூஞ்சை காளான்கள் பறிமுதல்; பெங்களூரில் உணவு பாதுகாப்புத் துறை அதிரடி
பெங்களூரு 5 நட்சத்திர ஹோட்டல்களில் அழுகிய கறி, காய்கறிகள் பறிமுதல்

"5 நட்சத்திர நட்சத்திர ஹோட்டல்களா இது?" அழுகிய இறைச்சி, பூஞ்சை காளான்கள் பறிமுதல்; பெங்களூரில் உணவு பாதுகாப்புத் துறை அதிரடி

எழுதியவர் Sekar Chinnappan
Aug 08, 2026
06:45 pm

செய்தி முன்னோட்டம்

பெங்களூருவில் உள்ள பிரபல 3 நட்சத்திர மற்றும் 5 நட்சத்திர சொகுசு ஹோட்டல்களில் சுகாதாரமற்ற முறையில் உணவுகள் தயாரிக்கப்படுவதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, கர்நாடக உணவு பாதுகாப்புத் துறை அதிரடி சோதனையில் ஈடுபட்டது. சுகாதாரத்துறை அமைச்சர் யு.டி.காதர் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட 30 சிறப்புப் படைகள் கொண்ட அதிகாரிகள் குழு, நகரில் உள்ள 26 முன்னணி சொகுசு ஹோட்டல்களில் ஒரே நேரத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் பல அதிர்ச்சி அளிக்கும் உணவு பாதுகாப்பு விதிமீறல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

பறிமுதல்

அழுகிய இறைச்சிகள் மற்றும் பூஞ்சை பிடித்த காய்கறிகள் பறிமுதல்

சோதனையின் போது, லலித் அசோக் ஹோட்டலில் 32 லிட்டர் காலாவதியான பாலும், 76 கிலோ இறைச்சியும், 200 கிலோ காய்கறிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

அதேபோல ஷாங்ரி-லா ஹோட்டலில் 15 கிலோ இறைச்சியும், ஃபோர் சீசன்ஸ் ஹோட்டலில் 19 கிலோ இறைச்சியும், விவாந்தா ஒயிட்ஃபீல்டு ஹோட்டலில் 3 கிலோ காலாவதியான பேக்கரி பொருட்களும், தாஜ் யஷ்வந்த்பூர் ஹோட்டலில் 72 கிலோ இறைச்சியும், ரேடிசன் ப்ளூ ஹோட்டலில் 105 கிலோ காலாவதியான உணவுப் பொருட்களும் அதிகாரிகளால் உடனடியாகக் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டன.

பரிசோதனை

ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள உணவு மாதிரிகள்

சோதனையின் போது ஹோட்டல் சமையலறைகளில் பயன்படுத்தப்பட்ட தேயிலைத் தூள், சிக்கன், மட்டன், மீன், சமையல் எண்ணெய், மிளகாய்த்தூள், தக்காளி சாஸ், பாலாடைக்கட்டி, இஞ்சி மற்றும் பால் உள்ளிட்ட 35 வகையான முக்கிய உணவு மாதிரிகளைச் சேகரித்த அதிகாரிகள், அவற்றை அரசு உணவுப் பகுப்பாய்வு ஆய்வகத்திற்குத் தீவிரப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

சைவ மற்றும் அசைவ உணவுப் பொருட்களைப் பிரித்து வைக்காமல் ஒன்றாக சேமித்து வைத்திருந்ததும், FSSAI லேபிள்கள் இல்லாமல் தரமற்ற முறையில் உணவுப் பொருட்களைப் பயன்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

நோட்டீஸ்

விதிமீறலில் ஈடுபட்ட ஹோட்டல்களுக்குச் சட்டப்பூர்வ நோட்டீஸ்

உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டம் 2006ன் கீழ் விதிமீறலில் ஈடுபட்ட ஹோட்டல் நிர்வாகங்களுக்கு (FBOs) உணவு பாதுகாப்புத் துறை சட்டப்பூர்வ நோட்டீஸ்களை அனுப்பியுள்ளது.

ஆய்வகத்திலிருந்து வரும் அதிகாரப்பூர்வப் பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஹோட்டல்கள் மீது நீதிமன்ற நடுவர் மூலம் கடுமையான அபராதங்கள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் பாயும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

பொதுமக்களின் சுகாதாரத்தில் எந்த காரணத்தைக் கொண்டும் சமரசம் செய்ய முடியாது என அரசு உறுதியளித்துள்ளது.

ADVERTISEMENT