NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் ஷேக் ஷாஜகானை சிபிஐயிடம் ஒப்படைக்க மறுத்தது மேற்கு வங்காளம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் ஷேக் ஷாஜகானை சிபிஐயிடம் ஒப்படைக்க மறுத்தது மேற்கு வங்காளம்

    உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் ஷேக் ஷாஜகானை சிபிஐயிடம் ஒப்படைக்க மறுத்தது மேற்கு வங்காளம்

    எழுதியவர் Sindhuja SM
    Mar 06, 2024
    11:54 am

    செய்தி முன்னோட்டம்

    மேற்கு வங்காளத்தின் சந்தேஷ்காலியில் மிரட்டி பணம் பறித்தல், நில அபகரிப்பு மற்றும் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் திரிணாமுல் பிரமுகர் ஷேக் ஷாஜகானை சிபிஐயிடம் ஒப்படைக்க வங்காள அரசு மறுத்துவிட்டது.

    சிபிஐயிடம் ஒப்படைக்குமாறு சிஐடிக்கு செவ்வாய்க்கிழமை கல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும், அவரை ஒப்படைக்க வங்காள அரசு மறுத்துள்ளது.

    ஷாஜகானின் காவலையும், ஆதாரங்களையும் நேற்று மாலை 4.30 மணிக்குள் ஒப்படைக்குமாறு காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

    ஆனால் இரவு 7.30 மணி வரை சிபிஐ குழுவிடம் குற்றவாளி ஒப்படைக்கப்படாததால் கொல்கத்தாவில் உள்ள போலீஸ் தலைமையகத்தில் இருந்து அதற்கு பின் சிபிஐ குழு வெளியேறியது.

    மேற்கு வங்காளம்

    மேற்கு வங்காள அரசு பாரபட்சத்துடன் செயல்படுவதாக குற்றச்சாட்டு 

    மேற்கு வங்காள அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியதால், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரை ஷேக் ஷாஜகானை விடுவிக்க முடியாது என்று மாநில அரசாங்கம் மறுத்துவிட்டது.

    இந்த வழக்கு குறித்து முன்பு விசாரித்த கல்கத்தா உயர் நீதிமன்றம் மேற்கு வங்காள அரசு பாரபட்சத்துடன் செயல்படுவதாக தெரிவித்தது.

    மேலும், ஷாஜகானுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை "நியாயமான, நேர்மையான மற்றும் முழுமையான விசாரணைக்கு" உட்படுத்த வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் அழைப்பு விடுத்தது.

    "சிபிஐக்கு மாற்ற இதை விட சிறந்த வழக்கு வேறு எதுவும் இருக்க முடியாது ... இது சிபிஐக்கு மாற்றப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும்" என்று உயர் நீதிமன்றம் குறிப்பிட்டது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மேற்கு வங்காளம்
    உச்ச நீதிமன்றம்
    சிபிஐ

    சமீபத்திய

    மே 17இல் தொடங்குகிறது ஐபிஎல் 2025; ஆறு மைதானங்களில் மட்டும் போட்டி; ஜூன் 3இல் ஃபைனல் ஐபிஎல் 2025
    IACCS: இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் வான் பாதுகாப்பு வெற்றியின் முதுகெலும்பு இவர்கள்தான் ஆபரேஷன் சிந்தூர்
    கூகுள் பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ சேவை முடங்கியதால் பொதுமக்கள் அவதி யுபிஐ
    இது போருக்கான சகாப்தம் அல்ல.. ஆனால்.. பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள் பிரதமர் மோடி

    மேற்கு வங்காளம்

    'தி கேரளா ஸ்டோரி' விவகாரம்: தமிழ்நாடு, மேற்கு வங்க அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்  இந்தியா
    2024 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவளிப்போம்: மம்தா பானர்ஜி இந்தியா
    ஒடிசா ரயில் விபத்து: 3 மேற்கு வங்க சகோதரர்கள் பலி! ரயில்கள்
    ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறங்கியதால் மம்தா பானர்ஜி காயம் மம்தா பானர்ஜி

    உச்ச நீதிமன்றம்

    "உயிரை மாய்த்து கொள்ள அனுமதி வேண்டும்": உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கோரிக்கை விடுத்த பெண் நீதிபதி உத்தரப்பிரதேசம்
    நாடாளுமன்றத்திலிருந்து நீக்கிய விவகாரம்: மஹுவா மொய்த்ராவின் மனுவை ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம் மஹுவா மொய்த்ரா
    "செக் நீதிமன்றத்தை அணுகவும்"- நிகில் குப்தா விவகாரத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவு அமெரிக்கா
    அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் மீது இந்தியா விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்: இந்திய-அமெரிக்க தலைவர்கள் வலியுறுத்தல் அமெரிக்கா

    சிபிஐ

    ஒடிசா ரயில் விபத்து: விசாரணை விரைவில் சிபிஐக்கு மாறுகிறது இந்தியா
    செந்தில் பாலாஜி கைது எதிரொலி: CBI க்கு தமிழக அரசு வைத்த செக்  தமிழக அரசு
    மணிப்பூர் கலவரம் - வழக்கு விசாரணை சிபிஐ'க்கு மாற்றம்  கைது
    மணிப்பூர் வீடியோ வழக்கிற்கு FIR பதிவு செய்தது CBI மணிப்பூர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025