Page Loader
பிரதமர் மோடியுடன் பயணம் மேற்கொண்டதை நினைவுகூரும் பியர் கிரில்ஸ்
பிரதமர் மோடியுடன் பயணம் மேற்கொண்டதை நினைவுகூரும் பியர் கிரில்ஸ்

பிரதமர் மோடியுடன் பயணம் மேற்கொண்டதை நினைவுகூரும் பியர் கிரில்ஸ்

எழுதியவர் Nivetha P
Feb 28, 2023
04:01 pm

செய்தி முன்னோட்டம்

உலகளவில் டிஸ்கவரி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிரபல நிகழ்ச்சி மேன் vs வைல்ட். இந்த நிகழ்ச்சியினை தொகுத்து வழங்குபவர் தான் பியர் கிரில்ஸ். இவர் காடுகள், பாலைவனங்கள் போன்ற பயணங்களை மேற்கொண்டு அதன் அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்வார். இதுவே இந்நிகழ்ச்சியின் சிறப்பாகும். இந்நிலையில் கடந்த 2019ம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் இந்த நிகழ்ச்சியின் ஷூட்டிங் நடந்தது. அதில் பிரதமர் மோடியும் பங்கேற்றார். அப்போது அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தினை கியர் கிரில்ஸ் நினைவுகூர்ந்து தற்போது ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். மேலும் 'இந்திய பிரதமருடன் மிகவும் ஈரமான மழைக்காடு சாகசத்தின் நினைவு' என்றும் அதில் அவர் பதிவு செய்துள்ளார். தற்போது இந்த பதிவு வைரலாக பரவி வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

பிரதமர் மோடியுடன் பயணம் மேற்கொண்டதை நினைவுகூரும் பியர் கிரில்ஸ்