மக்களே, இந்த 4 நாட்கள் வங்கி சேவைகள் முடங்கும் அபாயம்
செய்தி முன்னோட்டம்
வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம், தொடர் விடுமுறை காரணமாக 4 நாட்கள் வங்கிகள் முடங்கும் அபாயம் எழுந்துள்ளது.
சிறந்த ஆட்சேர்ப்பு, வேலைப் பாதுகாப்பு மற்றும் ஐந்து நாள் வேலை வாரம் போன்றவற்றைக் கோரி, வங்கி தொழிற்சங்கங்களின் ஐக்கிய மன்றம் (UFBU) இரண்டு நாள் வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளதால், மார்ச் 24-25 தேதிகளில் நாடு தழுவிய வங்கி சேவைகள் பாதிக்கப்படலாம்.
அதோடு அதற்கு முந்தைய இரண்டு நாட்கள்- மார்ச் 22ம் தேதி 4வது சனிக்கிழமை மற்றும் மறுநாள்(மார்ச் 23) ஞாயிறு விடுமுறை.
ஆக மொத்தம் 4 நாட்கள் வங்கி இயங்காது.
கோரிக்கைகள்
வங்கி ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகள் என்ன?
ஒன்பது முக்கிய வங்கி தொழிற்சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவான UFBU, இந்திய வங்கிகள் சங்கத்துடன் (IBA) ஒரு உடன்பாட்டை எட்டத் தவறியதை அடுத்து வேலைநிறுத்தத்தை அறிவித்தது.
பல கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்த வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிக ஆட்சேர்ப்பு, வேலை பாதுகாப்பு, அரசாங்கக் கட்டுப்பாட்டைக் குறைத்தல், மேம்படுத்தப்பட்ட கிராஜுவிட்டி சலுகைகள் உள்ளிட்ட பல கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.
சங்கங்கள்
போராட்டத்தில் பங்குபெறும் சங்கங்கள்
போராட்டத்தை அறிவித்துள்ள UFBU-வில் அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் (AIBEA), அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு (AIBOC), தேசிய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு (NCBE), அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் (AIBOA), இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு (BEFI), இந்திய தேசிய வங்கி ஊழியர்கள் காங்கிரஸ் (INBEC), இந்திய தேசிய வங்கி அதிகாரிகள் காங்கிரஸ் (INBOC), வங்கி தொழிலாளர்கள் தேசிய அமைப்பு (NOBW) மற்றும் வங்கி அதிகாரிகள் தேசிய அமைப்பு (NOBO) போன்ற வங்கி தொழிற்சங்கங்கள் அடங்கும்