NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / திருப்பதியில் தானியங்கி முறையில் லட்டு தயாரிப்பு
    இந்தியா

    திருப்பதியில் தானியங்கி முறையில் லட்டு தயாரிப்பு

    திருப்பதியில் தானியங்கி முறையில் லட்டு தயாரிப்பு
    எழுதியவர் Nivetha P
    Feb 02, 2023, 11:40 am 1 நிமிட வாசிப்பு
    திருப்பதியில் தானியங்கி முறையில் லட்டு தயாரிப்பு
    திருப்பதியில் ரூ.50 கோடி செலவில் நவீன முறையில் லட்டு தயாரிப்பு - ரிலையன்ஸ் குழுமம்

    இந்தியாவின் 74வது குடியரசு தினமான ஜனவரி 26ம் தேதியன்று திருமலையில் உள்ள கோகுலம் இல்ல வளாகத்தில் தேவஸ்தான செயல் அதிகாரி தர்மா ரெட்டி தேசிய கொடியினை ஏற்றினார். அதன் பின்னர் பேசிய தர்மா ரெட்டி அவர்கள் கூறியதாவது, இந்த ஆண்டின் முக்கிய இரண்டு திட்டங்களை செயல்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. அதன்படி திருமலையில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகம் ஒன்றினை அமைக்கவும், லட்டு தயாரிப்பினை 'ஆட்டோமேஷன்' என்னும் தானியங்கி முறையில் நவீனமயமாக்கவும் முயற்சிகள் எடுக்கப்படவுள்ளது என்று தெரிவித்தார். இதற்கு உதவும் வகையில் இரண்டு நிறுவனங்கள் முன்வந்துள்ளது என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், தேவஸ்தான செயல் அதிகாரி தர்மா ரெட்டி கூறியதற்கு ஏதுவாக திருப்பதியில் 4000க்கும் மேற்பட்ட கலைப்பொருட்கள் அடங்கிய அருங்காட்சியகத்தை ரூ.120 கோடி செலவில் அமைக்க 'டாடா' நிறுவன அறக்கட்டளை முன்வந்துள்ளது.

    திருப்பதியில் ரூ.50 கோடி செலவில் நவீன முறையில் லட்டு தயாரிப்பு - ரிலையன்ஸ் குழுமம்

    அதே போல், 'ரிலையன்ஸ்' குழுமம் 'ஆட்டோமேஷன்' என்னும் தானியங்கி முறையில் ரூ.50 கோடி செலவில் லட்டுகளை நவீன முறையில் தயாரித்து தருவதற்கு ஒப்புதல் அறிவித்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இந்த இரண்டு திட்டங்களுக்கு அடுத்த ஒரு வருடத்திற்குள் முடிக்கப்படும் என்று கூறிய தர்மா ரெட்டி, இந்த நவீன முறையில் தயாரிக்கப்படும் லட்டுகளின் அளவு அதிகரிப்பதோடு தரமும் அதிகரிக்கப்படும் என்று கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், திருப்பதியில் உள்ள தங்குமிடங்கள் ரூ.230 கோடி ரூபாய் செலவில் 90 சதவிகிதம் புனரமைக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த சில மாதங்களில் முழு பணிகளும் முடிவுறும் என்று கூறினார். மேலும், ரூ.100 கோடி செலவில் பக்தர்களுக்காக இன்னுமொரு வளாகமும் கட்டப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    திருப்பதி

    சமீபத்திய

    கேம் பிரியர்களுக்காக வரும் ASUS ROG Phone 7 - என்ன எதிர்பார்க்கலாம்? ஸ்மார்ட்போன்
    ரூ.2 லட்சம் மதிப்பிலான ஜாக்கெட்டை அணிந்திருந்த வட கொரிய அதிபரின் மகள் வட கொரியா
    காஷ்மீருக்கு செல்லும் முதல் ரயில் பாதை டிசம்பரில் திறக்கப்படும்: ரயில்வே அமைச்சர் ஜம்மு காஷ்மீர்
    வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் 'விடுதலை' படத்தின் மேக்கிங் வீடியோ வெற்றிமாறன்

    திருப்பதி

    சென்னை தி.நகரில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஸ்ரீ பத்மாவதி தாயார் கோயில் கும்பாபிஷேகம் சென்னை
    திருப்பதி கோயிலில் மொட்டை அடிக்க காரணம் - பல சுவாரஸ்ய தகவல்கள் ஆந்திரா
    ஒரு கிராமமே ஒன்றாக திருப்பதிக்கு செல்லும் அதிசயம் தமிழ்நாடு
    திருப்பதி லட்டு வழங்குவதில் மாற்றம் செய்யவுள்ள தேவஸ்தானம் ஆந்திரா

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023