ராஜஸ்தானில் இன்று சட்டசபை தேர்தல்; ஆட்சியை பிடிக்க காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ராஜஸ்தானின் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு, சனிக்கிழமை காலை 7:00 மணிக்குத் தொடங்கியது. மாலை 6:00 மணி வரை தொடருமென எதிர்பார்க்கப்படும் வாக்குபதிவில், சுமார் 5.25 கோடி மக்கள் வாக்களிப்பார்கள் எனக்கணிக்கப்படுகிறது. தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை பிடிக்கும் என ஆளும் காங்கிரஸ் கட்சி, தற்போதைய முதல்வர் அசோக் கெலாட் அரசாங்கத்தின் செயல்பாடு மற்றும் பணிகளை தனது தேர்தல் பிரச்சாரத்தில் முன்னிலைப்படுத்தியது. இதற்கிடையில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், ஊழல் போன்ற விவகாரங்களில் கவனம் செலுத்தி காங்கிரஸை வீழ்த்த பாஜக தேர்தல் பிரச்சாரம் செய்தது. ராஜஸ்தானில் உள்ள 200 தொகுதிகளில் 199 தொகுதிகளில், இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3ஆம் தேதி நடைபெற உள்ளது.