
ஒரு சிக்கன் நெக்கில் கைவைத்தால் இரண்டு சிக்கன் நெக் பறிபோகும்; பங்களாதேஷுக்கு அசாம் முதல்வர் எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பங்களாதேஷிற்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதட்டங்களுக்கு மத்தியில் இரு நாடுகளிலும் மூலோபாய வழித்தடங்களை அமைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்தியாவின் சிலிகுரி வழித்தடத்தில் பங்களாதேஷ் கவனம் அதிகரித்து வருவதற்கு பதிலளிக்கும் விதமாக அவரது கருத்துக்கள் வந்துள்ளன.
இந்த சிலிகுரி காரிடார் சிக்கன்'ஸ் நெக் என்றும் அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் பிரதான நிலப்பகுதியை அதன் வடகிழக்கு மாநிலங்களுடன் இணைக்கும் குறுகிய 22 கிமீ அகலமுள்ள பகுதியாகும்.
இதுகுறித்து ஊடகங்களுக்கு உரையாற்றிய ஹிமந்தா பிஸ்வா சர்மா, இந்தியா ஒரு சிக்கன்'ஸ் நெக் வைத்திருந்தாலும், பங்களாதேஷ் இரண்டு சிக்கன்'ஸ் நெக் கொண்டுள்ளதை மறந்துவிடக் கூடாது என்று எச்சரித்தார்.
சிக்கன்'ஸ் நெக்
இரண்டு சிக்கன்'ஸ் நெக்கிலும் பதிலடி
"பங்களாதேஷ் நமது சிக்கன்ஸ் நெக்கை குறிவைத்தால், நாம் அவர்களின் இரு சிக்கன் நெக்ஸையும் குறிவைத்து பதிலடி கொடுப்போம்." என்று அவர் கூறினார்.
மேகாலயாவை வங்கதேசத்தின் சிட்டகாங் துறைமுகத்துடன் இணைக்கும் வழித்தடம் இந்தியாவின் சிலிகுரி காரிடாரை விடவும் மெல்லியதாகவும் எளிதில் பாதிக்கப்படக்கூடியதாகவும் உள்ளது என்பதை அவர் குறிப்பிட்டார்.
சிலிகுரி வழித்தடத்திலிருந்து வெறும் 100 கி.மீ தொலைவில் அமைந்துள்ள லால்மோனிர்ஹாட்டில் இரண்டாம் உலகப் போரின் விமானத் தளத்தை மீண்டும் கட்டுவதில் சீனா வங்கதேசத்திற்கு உதவி வருவதாக வெளியான செய்திகளைத் தொடர்ந்து இந்தக் கருத்துக்கள் வந்துள்ளன.
இந்தப் பகுதியின் மூலோபாய முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு, இந்த நிகழ்வு இந்திய பாதுகாப்பு வட்டாரங்களில் எச்சரிக்கைகளை எழுப்பியுள்ளது.
இரண்டாவது சிக்கன் நெக்
பங்களாதேஷில் இரண்டாவது சிக்கன் நெக்
பங்களாதேஷில் உள்ள இரண்டு குறுகிய வழித்தடங்களில் ஒன்று சிட்டகாங்கை பிரதான நிலப்பகுதியுடன் இணைக்கும் அதே வேளையில், மற்றொன்று ரங்பூர் பிரிவுக்கு அருகில் அமைந்துள்ளது. அதன் இணைப்பு மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு இந்த இரண்டும் இன்றியமையாதவை.
இரண்டில் ஒன்றைத் தடுப்பது வங்கதேசத்தை கணிசமாக பாதிக்கலாம். ஹிமந்தா பிஸ்வா சர்மா இந்தியாவின் ராணுவ வலிமையையும் குறிப்பிட்டு, ஆபரேஷன் சிந்தூரை தீர்க்கமான நடவடிக்கைக்கான உதாரணமாகக் குறிப்பிட்டார்.
மேலும் இந்தியாவின் உறுதியைச் சோதிக்கும் வேலையில் பங்களாதேஷ் ஈடுபடக் கூடாது என்று எச்சரித்தார்.
குறிப்பாக பங்களாதேஷ் இடைக்கால அரசின் ஆலோசகர் முகமது யூனுஸ் சமீபத்தில் சீனாவுக்கு சென்றபோது இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் குறித்து பேசியதை அடுத்து ராஜதந்திர பதட்டம் அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.