Page Loader
ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கு: ஷாருக்கானைக் கட்டாயப்படுத்தி பணம் கொடுக்க வைத்த செல்ஃபி! 
ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கு

ஆர்யன் கான் போதைப்பொருள் வழக்கு: ஷாருக்கானைக் கட்டாயப்படுத்தி பணம் கொடுக்க வைத்த செல்ஃபி! 

எழுதியவர் Arul Jothe
May 16, 2023
03:03 pm

செய்தி முன்னோட்டம்

பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகனை திட்டமிட்டு போதைப்பொருள் வழக்கில் சிக்க வைத்த சம்பவம் குறித்து பரபரப்பான தகவல் வெளியாகி வருகிறது. இதில், பணம் கொடுக்க வைப்பதற்காக எடுக்கப்பட்ட ஒரு செல்ஃபியே, இப்போது காவல்துறை அதிகாரி செய்த பிளாக்மெயிலைக் கண்டறிய உதவியுள்ளது. ஆர்யன்கானை விடுவிக்க சமீர் வான்கடே ரூ.25 கோடியை லஞ்சமாக பெற்றுள்ளார் என குற்றச்சாட்டப்பட்டுள்ளது. FIR-ன் படி ஆர்யன் கான் NCB அலுவலகத்திற்கு KP கோசாவியின் தனிப்பட்ட வாகனத்தில் கொண்டு வரப்பட்டது தெரியவந்துள்ளது. மேலும் ஆர்யன் கானுடன் KP கோசாவி எடுத்த செல்ஃபி வைரலானது, அவர் NCB அதிகாரிகளின் காவலில் இருந்தபோது கிளிக் செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு கேபி கோசாவிக்கு சுதந்திரம் இருந்ததாகவும், செல்பி எடுத்ததாகவும், ஆர்யன் கானின் குரல் குறிப்பை பதிவு செய்ததாகவும் சிபிஐ எஃப்ஐஆர் கூறியுள்ளது.

Aryan khan

லஞ்ச ஊழல் வழக்கு பதிவு

சமீர் வான்கடேவின் சார்பாக கே.பி.கோசாவி ஆர்யன்கானை போதை வழக்கில் சிக்க வைக்காமல் இருக்க, மிரட்டி ரூ.25 கோடியை லஞ்சமாக வாங்க முயன்றதாகத் தெரியவந்துள்ளது. இதில் அப்போதைய புலனாய்வு அதிகாரி ஆஷிஷ் ரஞ்சன், கே.பி.கோசாவி மற்றும் டிசோசா கூட்டாளிகள் ஆவர். இதனால் சிபிஐ அதிகாரிகள், சமீர் வான்கடே மீது லஞ்ச ஊழல் வழக்கைப் பதிவு செய்தனர். போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஆர்யன் கானை சிக்க வைக்காமல் இருக்க ரூ.18 கோடியை சமீர் வான்கடே உள்ளிட்டோர் லஞ்சமாக பெற்றதாகவும், அதில் ரூ.50 லட்சத்தை கோசாவியும், சான்வில் டிசோசாவும் எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. எப்ஐஆர் பதிவு செய்த பின்னர் இந்த வழக்கு தொடர்பாக சமீர் வான்கடேவின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 30 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது.