Page Loader
ஆர்யன்கான் மீது போலி வழக்கு: சமீர் வான்கடே மீதான சிபிஐ எஃப்ஐஆர் என்ன சொல்கிறது! 
ஆர்யன் கானுக்கு எதிரான நடவடிக்கைகளின் போது கேபி கோசாவிக்கு அதிக சுதந்திரம் அளித்ததாக FIR பதிவு

ஆர்யன்கான் மீது போலி வழக்கு: சமீர் வான்கடே மீதான சிபிஐ எஃப்ஐஆர் என்ன சொல்கிறது! 

எழுதியவர் Arul Jothe
May 16, 2023
11:15 am

செய்தி முன்னோட்டம்

பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் மகன் வழக்கில், NCPயின் முன்னாள் மண்டல இயக்குநரான சமீர் வான்கடே, ஆர்யன் கானுக்கு எதிரான நடவடிக்கைகளின் போது கேபி கோசாவிக்கு அதிக சுதந்திரம் அளித்ததாக சி.பி.ஐ FIR பதிவு செய்தது. முன்னாள் NCP எஸ்பி விஷ்வ விஜய் சிங், ஆஷிஷ் ரஞ்சன், கோசாவி, சான்வில் டிசோசா & வான்கடே மீது FIR பதிவு செய்யப்பட்டது. சோதனை குறித்த அசல் அறிக்கை மாற்றப்பட்டது போன்ற குற்றச்சாட்டுகள்; மேலும் ஆர்யன் மீது பொய் வழக்கு போடப்படுவதைத் தடுக்க ஷாருக்கானின் குடும்பத்தை மிரட்டி ரூ. 25 கோடி லஞ்சம் கேட்டது திட்டத்தின் ஒரு பகுதியாகும். இறுதியில் ரூ. 18 கோடி செலுத்தப்பட்டது, கோசாவி ரூ. 50 லட்சத்தை முன்பணமாக எடுத்துக் கொண்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Aryan Khan

சிறப்புப் புலனாய்வுக் குழு முடிவு

இந்திய வருவாய் சேவை (IRS) அதிகாரி வான்கடே தலைமையிலான அதிகாரிகள் குழு, சிங், கோசாவி மற்றும் பிரபாகர் சைல் ஆகியோருடன் சேர்ந்து, கோர்டேலியா சர்வதேச கப்பல் முனையத்தில் அக்-2, 2021 அன்று சோதனை நடத்தினர். விசாரணைக்குப் பிறகு, ஆர்யன், அர்பாஸ் & முன்மம் தமேச்சா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கப்பலில் போதைப்பொருள் மற்றும் பணம் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட மேலும் 17 நபர்களை கைது செய்த பிறகு, மே 2022 இல் ஆர்யன் எந்தத் தவறும் செய்யவில்லை என்று NCB இன் சிறப்புப் புலனாய்வுக் குழு முடிவு செய்தது. இருப்பினும், வான்கடே & பிறருக்கு எதிராக உள் விசாரணை நடத்தப்பட்டது, இது சிபிஐயின் FIRக்கு அடிப்படையாக அமைந்தது.