NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / "மதுபான ஊழல் என்று அழைக்கப்படும் வழக்கில் பணம் எங்குள்ளது என்பதை அவரே வெளிப்படுத்துவார்": அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி
    அடுத்த செய்திக் கட்டுரை
    "மதுபான ஊழல் என்று அழைக்கப்படும் வழக்கில் பணம் எங்குள்ளது என்பதை அவரே வெளிப்படுத்துவார்": அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி
    அர்விந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு மீதான விசாரணையின் இறுதி தீர்ப்பு இன்று மாலை 4 மணியளவில் வெளியாகும்

    "மதுபான ஊழல் என்று அழைக்கப்படும் வழக்கில் பணம் எங்குள்ளது என்பதை அவரே வெளிப்படுத்துவார்": அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி

    எழுதியவர் Venkatalakshmi V
    Mar 27, 2024
    03:17 pm

    செய்தி முன்னோட்டம்

    ஆம் ஆத்மி கட்சியை உலுக்கிய டெல்லி மதுக் கொள்கை ஊழலில் தேடப்படும் பணம் எங்குள்ளது என அரவிந்த் கெஜ்ரிவால் அம்பலப்படுத்துவார் என்று அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால் புதன்கிழமை காலை தெரிவித்தார்.

    கடந்த வாரம் அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்டு ஏப்ரல் 9 வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ள முதலமைச்சர், மதுபான ஊழல் என்று அழைக்கப்படும் பணத்தின் இருப்பிடத்தை அவரே வெளிப்படுத்துவார் என்று திருமதி கெஜ்ரிவால் கூறினார்.

    நகரின் பொதுப்பணி மற்றும் சுகாதார அமைச்சர்களான அதிஷி மற்றும் சௌரப் பரத்வாஜ் ஆகியோருக்கு கெஜ்ரிவால் வழிகாட்டுதல்களை வழங்கியதற்கு, அவர் மீது வைக்கப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியையும் அவர் சாடினார்.

    ஜாமீன் மனு

    இன்று மாலை தீர்ப்பு?

    மதுபான கொள்கை விவகாரத்தில், அர்விந்த் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு மீதான விசாரணையின் இறுதி தீர்ப்பு இன்று மாலை 4 மணியளவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையே அரவிந்த் கெஜ்ரிவாலின் மனைவி வெளியிட்ட வீடியோவில்,"கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்த மதுபானக் கொள்கை வழக்கில் 250 சோதனைகளை நடத்தியதாக அரவிந்த்ஜி என்னிடம் கூறினார். இந்த 'ஊழல்' பணத்திற்காக அவர்கள் தேடுகிறார்கள் என்று அவர் என்னிடம் கூறினார். ஆனால் இதுவரை அவர்கள் ஒரு பைசா கூட சட்டவிரோத பணத்தை மீட்கவில்லை," என்று அவர் கூறினார்.

    முதல்வர் கைது செய்யப்பட்டதையடுத்து, டெல்லி நகரம் முழுவதும் பெரும் போராட்டங்கள் வெடித்தன.

    ஆம் ஆத்மி தலைவருக்கு ஆதரவாக காங்கிரஸ், வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குரல் கொடுத்தன.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    அரவிந்த் கெஜ்ரிவால்
    மதுபானம்
    ஆம் ஆத்மி
    டெல்லி

    சமீபத்திய

    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு
    முதன்முறையாக, தாலிபான் வெளியுறவுத்துறை அமைச்சரிடம் பேசிய இந்தியா வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எஸ்.ஜெய்சங்கர்
    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ

    அரவிந்த் கெஜ்ரிவால்

    யமுனை நீர்மட்டம் கடும் உயர்வு: டெல்லி முதல்வரின் வீடு வரை வெள்ளம்  டெல்லி
    டெல்லியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படலாம்: டெல்லி முதல்வர் அறிவிப்பு  டெல்லி
    உச்சநீதிமன்றம் வரை வெள்ளம்: இராணுவத்திற்கு அழைப்புவிடுத்தார் அரவிந்த் கெஜ்ரிவால்  டெல்லி
    சர்ச்சைக்குரிய டெல்லி அவசரச் சட்டம் தொடர்பான மசோதாவை அறிமுகப்படுத்த இருக்கும் மத்திய அரசு  டெல்லி

    மதுபானம்

    500 டாஸ்மாக் மதுபான கடைகள் விரைவில் மூடப்படும்: அமைச்சர் செந்தில் பாலாஜி டாஸ்மாக்
    டெல்லி மெட்ரோ ரயிலில் மதுபாட்டில்களை எடுத்துச் செல்ல அனுமதி டெல்லி
    தமிழ்நாட்டில் தீபாவளிக்கு ₹467 கோடிக்கு மது விற்பனை தமிழ்நாடு
    தானேயில் ரேவ் பார்ட்டி: இருவர் கைது, 95 பேர் தடுத்துவைப்பு, போதைப்பொருட்கள் பறிமுதல் மகாராஷ்டிரா

    ஆம் ஆத்மி

    புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை ஒற்றுமையாக புறக்கணிக்கும் 19 எதிர்க்கட்சிகள்  இந்தியா
    ஆம் ஆத்மி கட்சியின் சத்யேந்தர் ஜெயினுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம் டெல்லி
    அவசர சட்ட விவகாரம்: மு.க.ஸ்டாலினை சந்தித்தார் அரவிந்த் கெஜ்ரிவால் இந்தியா
    டெல்லி அவசர சட்டத்திற்கு எதிராக காங்கிரஸின் ஆதரவை நாடும் அரவிந்த் கெஜ்ரிவால்  இந்தியா

    டெல்லி

    டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை 6வது முறையாக சம்மன் அரவிந்த் கெஜ்ரிவால்
    பஞ்சாபில் ரயில்களை மறித்து விவசாயிகள் போராட்டம் நடத்த திட்டம்; மத்திய அரசுடன் விரைவில் பேச்சுவார்த்தை எனத்தகவல் விவசாயிகள்
    மத்திய அரசுடன் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லை; பாரத் பந்த்திற்கு அழைப்பு விடுத்த விவசாய சங்கங்கள் விவசாயிகள்
    மதுபான கொள்கை வழக்கு: டெல்லி நீதிமன்றத்திற்கு முன் ஆன்லைனில் ஆஜரானார் அரவிந்த் கெஜ்ரிவால்  அரவிந்த் கெஜ்ரிவால்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025