
டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன்
செய்தி முன்னோட்டம்
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மத்திய புலனாய்வு அமைப்பு(சிபிஐ) விசாரணைக்கு அழைத்துள்ளது.
தற்போது ரத்து செய்யப்பட்ட டெல்லி மதுபான ஊழல் வழக்கு தொடர்பாக இந்த விசாரணை நடத்தப்பட இருக்கிறது.
இந்த ஊழல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட டெல்லியின் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஏற்கவனவே கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
வரும் ஞாயிற்றுக்கிழமை ஆஜராகுமாறு அரவிந்த் கெஜ்ரிவாலிடம் சிபிஐ கேட்டுக் கொண்டுள்ளது.
டெல்லி மதுபான கொள்கையின் மூலம் சலுகைகள் பெற உயர்மட்ட நிறுவனங்களிடம் இருந்து ஆம் ஆத்மி கட்சிக்கு லஞ்சம் வழங்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
கோவா சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்துக்கு இந்த ஊழல் பணம் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
பாஜக தனது அரசியல் போட்டியாளர்களை துன்புறுத்துவதற்காக விசாரணை அமைப்புகளைப் பயன்படுத்துகிறது என்று இதற்கு கெஜ்ரிவால் பதிலளித்திருந்தார்.
ட்விட்டர் அஞ்சல்
ஏப்ரல் 16ஆம் தேதி டெல்லி முதல்வர் சிபிஐக்கு முன் ஆஜராக வேண்டும்
CBI summons Delhi CM and AAP national convenor Arvind Kejriwal on April 16 to question him in the excise policy case. pic.twitter.com/jlStNKhU2Y
— ANI (@ANI) April 14, 2023