Page Loader
நண்பனின் மகளை பல மாதங்களாக பலாத்காரம் செய்த அரசு அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை
பாதிக்கப்பட்ட சிறுமி டெல்லியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

நண்பனின் மகளை பல மாதங்களாக பலாத்காரம் செய்த அரசு அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை

எழுதியவர் Sindhuja SM
Aug 21, 2023
01:30 pm

செய்தி முன்னோட்டம்

டெல்லியின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் அரசு அதிகாரி ஒருவர் தனது நண்பரின் 14 வயது மகளை பல மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்து, அந்த சிறுமியை கருவுற செய்ததற்கு எதிராக நேற்று வழக்கு பதிவு செய்யப்பட்டது. குற்றம்சாட்டப்பட்டவரை கைது செய்வதற்காக டெல்லி போலீசார் அந்த அரசு அதிகாரியின் இல்லத்திற்கு சென்றுள்ளனர். குற்றம்சாட்டப்பட்ட அரசு அதிகாரியை சஸ்பெண்ட் செய்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி டெல்லியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார். 2020 ஆம் ஆண்டு அந்த சிறுமியின் தந்தை இறந்துவிட்டதால், அவர் குற்றம் சாட்டப்பட்ட அரசு அதிகாரியின் வீட்டில் தான் வசித்து வந்தார்.

டொய்க்

போக்சோ சட்டத்தின் கீழ் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது

குற்றம் சாட்டப்பட்டவர் நவம்பர் 2020 முதல் ஜனவரி 2021 வரை பாதிக்கப்பட்ட சிறுமியை பல முறை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால், மன அழுத்தத்திற்கு உள்ளான சிறுமி ஒரு வாரத்திற்கு முன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுமியின் பிரச்சனையை தெரிந்து கொண்ட உளவியல் மருத்துவர்கள் காவல்துறைக்கு உடனடியாக தகவல் அளித்தனர். பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டு கருவுற்ற சிறுமிக்கு குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் அவரது மனைவி கரு கலைப்பு செய்ததாகவும் FIRரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட அரசு அதிகாரிக்கு டெல்லி போலீசார் நோட்டீஸ் அனுப்பி விசாரணையும் நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.